×

என்னைக் காதலிக்க மாட்டியா? அப்ப இதப் பாரு ! வீடியோ காலில் இளைஞர் செய்த விபரீதம்!

வீடியோ காலில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணிடம் பேசிக்கொண்டே இளைஞர் ஒருவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

 

வீடியோ காலில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணிடம் பேசிக்கொண்டே இளைஞர் ஒருவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

மணிப்பூரைச் சேர்ந்த ஜோனாதன் பமோயி என்ற இளைஞர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் வேலையில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்ற இவர் மறுநாளும் வேலைக்கு வரவில்லை. அதனால் அவரது மேலாளர் பயோமியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் மின் விசிறியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் உடல் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து போலீஸாருக்குத் தகவல் செல்ல அவர்கள் நடத்திய விசாரணையில் பயோமின் கடைசியாக ஒரு பெண்ணுக்கு வீடியோ கால் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணைக் கண்டுபிடித்து விசாரித்ததில் ’பயோமி என்னை ஒருதலையாக காதலித்தார். ஆனால் நான் அவர் காதலை ஏற்கவில்லை. அதனால் எனக்கு வீடியோ கால் செய்து என்னை மிரட்டினார். பின்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்’ என சொல்லியுள்ளார். இந்த சம்பவமானது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News