×

மூன்றாம் கணவருடன் முதல் செல்ஃபி -  வனிதா அக்கா வெளியிட்ட லவ்லி போட்டோ

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள்.  இருக்கு இதுவரை இரண்டு திருமணங்கள் நடைபெற்றுவுள்ளது. 2007ம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2010ல் பிரிந்துவிட்டார்.

 

அதையடுத்து ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் பிரிந்துவிட்டனர்.  நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்த வனிதா திருமணம் செய்துகொள்போவதாக அறிவித்து பின்னர் பிரிந்துவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது திருமணத்தை செய்யவிருக்கிறார் வனிதா.

ஆம்,  பீட்டர் பவுல் என்பவரை வருகிற ஜூன் 27ம் தேதி கரம் பிடிக்கிறார் வனிதா. இந்நிலையில்  இருவரும் திருமண வேலைகள் மற்றும் திருமண அழைப்பு விடுதல் உள்ளிட்டவற்றில் பிசியாக இருந்து வருகின்றனர். தற்ப்போது வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவர் பீட்டர் பாலுடன் காரில் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோவை வெளியிட்டுள்ளார். முதன்முறையாக இந்த ஜோடியை ஒன்றாக சேர்த்து பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

View this post on Instagram

Kancheepuram collectorate...invitation for passes

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

From around the web

Trending Videos

Tamilnadu News