Categories: Cinema News latest news

அமீருக்கு அடுத்தடுத்து ஆப்பு!.. இப்போ இப்படியொரு வழக்குல மனுஷன் மாட்டிக்கின்னாரே!..

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில், இயக்குநர் அமீருக்கும் சம்பந்தம் இருப்பதாக ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. யாரும் கேட்கும் முன்பாகவே தனக்கும் ஜாபர் சாதிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தயாரிப்பில் உருவாகி வரும் இறைவன் பெரியவன் படத்திலும் இனிமேல் தொடர போவதில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.

மேலும், விசாரணைக்கு அழைத்தாலும் வரத் தயாராகவே உள்ளேன் எனக் கூறியிருந்தார்.  இந்நிலையில், அடுத்த பிரச்சனை அமீர் தலைக்கு வந்திருக்கிறது.

இதையும் படிங்க: கமலை வளர்க்கவே கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்… அண்ணா இல்ல அப்பா.. கெத்தாக சொன்ன சாருஹாசன்!…

ஜாபர் சாதிக் பிரச்சனைக்கு முன்பாகவே ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் இடையே ஒரு பஞ்சாயத்து பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.  பருத்தி வீரன் படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்கி இருந்தார்.

அந்த படத்தில் இருந்தே இருவருக்கும் பிரச்சனை வெடித்தது. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் மூலம் அமீர் கொடுத்த பேட்டியில் ஞானவேல் ராஜாவின் அப்பா வி.கே. ஈஸ்வரன் குறித்து அமீர் அவதூறாக பேசியதாக தற்போது அமீர் மீது மான நஷ்ட வழக்கை வி.கே. ஈஸ்வரன் தொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கொடிக்கட்டி பறந்த தயாரிப்பாளர்!… கதையை நம்பாமல் வேறு ஐடியாவை பிடிக்க காணாமல் போன பரிதாபம்…

நடிகர் சிவகுமாரின் மகன் கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.  அந்த படத்தை இயக்கிய அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ள நிலையில், தற்போது மான நஷ்ட வழக்கு பாய்ந்துள்ளது.

Saranya M
Published by
Saranya M