Connect with us

latest news

ஆஹா!.. என் தலைவனை பார்த்துட்டேன்!.. வடிவேலுவை பார்த்த குஷியில் ஜிபி முத்து வெளியிட்ட பிக்ஸ்!..

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை ஓரங்கட்டும் விதமாக டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர். சோனியா அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நிலையில், அடுத்ததாக வைகை புயல் வடிவேலுவை இந்த நிகழ்ச்சியில் களம் இறக்கி உள்ளனர்.

திமுக மற்றும் சன் டிவிக்கு நெருக்கமாக இருந்து வரும் வடிவேலு கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் 50 கோடி வரை வசூல் ஈட்டியது. உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது கடைசி படம் லைஃப் டைம் செட்டில்மெண்ட் படமாக மாறியது.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு முன்னாடியே ரிட்டயர்டு பார்ட்டி தான்!.. லேடி சூப்பர் ஸ்டார் சோலியை முடித்த பிரபலம்?..

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக வடிவேலு கம்பேக் கொடுத்தாலும் அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. காமெடியனாக சந்திரமுகி 2 படத்தில் மொக்கை போட்டு வடிவேலுவை ரசிக்க ரசிகர்கள் தயாராக இல்லை. ஆனால், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் வடிவேலுவின் மொத்த திறமையையும் வெளியே கொண்டு வந்திருப்பார்.

விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி வைத்து நடத்தியும் ரசிகர்கள் கண்டு கொள்ளாத நிலையில், சமையல் நிகழ்ச்சியை பார்க்க யாரும் தயாராக இல்லை அதில் இடம்பெறும் காமெடியை பார்க்கத்தான் ரசிகர்கள் ரெடியாக உள்ளனர் என்பதை புரிந்து கொண்ட சன் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்திய டீமை வைத்து டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாசரை காலில் விழ வைத்த இளையராஜா!.. அந்த பாட்டுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?!…

வடிவேலு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. “ கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” பாடலை வடிவேலு பாட குக் வித் கோமாளி நிகழ்ச்சி உண்மையான நிகழ்ச்சி அல்ல டாப் குக் டூப் குக் தான் ஒரிஜினல் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்.

வடிவேலுவை செட்டில் பார்த்த ஜிபி முத்து ஆஹா என் தலைவனை பார்த்து விட்டேன் என குசேலன் படத்தில் ரஜினியை பார்த்த வடிவேலு மோடுக்கு மாறி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜிபி முத்துவுக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புகழில் ஊழல் செய்யும் கவின்… இதெல்லாம் ரொம்பவே ஓவரா இருக்கு… விளாசி தள்ளும் பிரபலம்!…

 

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top