Categories: Cinema News latest news

கண்டெய்னர் ஃபுல்லா பணம்!.. தனுஷின் குபேரா படத்தின் கதை இதுதானா?.. லீக் பண்ண போஸ்டர்?..

டோலிவுட்டு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் குபேரா படம் உருவாகி வருகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார். முன்னதாக தெலுங்கு இயக்குனருடன் இணைந்து வாத்தி படத்தில் தனுஷ் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ அதே அளவுக்கு வாத்தி திரைப்படம் தெலுங்கிலும் வரவேற்பு பெற்றது.

இதையும் படிங்க: தாமரையை மலர வைக்கும் முயற்சியா இது? தயாராகப் போகும் அண்ணாமலை பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா?

வாத்தி படத்துக்கு முன்பாகவே சேகர் கமுலா இயக்கத்தில் நடிப்பதற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்த படம் தற்போது பரபரப்பாக சூட்டிங் செய்யப்பட்டு வருகிறது. நாகார்ஜுனாவின் பிறந்தநாள் கூட இன்று இல்லை ஆனால் திடீரென அவரது கேரக்டர் போஸ்டரை வெளியில போவதாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் தற்போது அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ஒரு கண்டெய்னர் முழுக்க குவியல் குவியலாக படம் கொட்டிக்கிடக்க சந்தோசம் இல்லாமல் கொட்டும் மழையில் குடையை பிடித்துக்கொண்டு பணத்தின் பக்கம் பார்க்காமல் திரும்பி நிற்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இது செம ஆஃபரே இருக்கே!. வாயடைத்து போன மகாநதி சீரியல் நடிகை!.. வீடியோ பாருங்க!..

முன்னதாக வெளியான தனுஷ் போஸ்டரில் பிச்சைக்காரன் போல இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருந்தனர். இந்த இரண்டு போஸ்டர்களையும் படத்தின் டைட்டிலும் வைத்து பார்த்தால் கிட்டத்தட்ட கதை இதுவாகத்தான் இருக்கும் என யூகிக்க முடிகிறது.

பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷ் நாகார்ஜுனாவை சந்தித்து அவரது பிரச்சனைகளை சரிசெய்து எப்படி பணக்காரன் ஆகிறார். எப்படி குபேரன் ஆகிறாள் என்பதுதான் கதையாக இருக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: டாடா படத்திலும் அந்த பிரச்னை இருந்துச்சு… உடைத்த கவின்.. என்னங்க வாரிசு இயக்குனரையே அசிங்கப்படுத்திட்டீங்க…

Saranya M
Published by
Saranya M