Categories: Cinema News latest news

விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…

Vijay-Vijayakanth: நடிகர் விஜய் மற்றும் விஜயகாந்தின் நெருக்கம் தமிழ் சினிமா அறிந்தது கதை தான். அதை தற்போது விஜயகாந்தின் மனைவியும், அரசியல்வாதியுமான பிரேமலதா விஜயகாந்தே ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது.

எஸ் ஏ சந்திரசேகரனின் இயக்கத்தில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் விஜய். நிறைய படங்களில் நடித்தாலும் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தன் இயக்கத்தில் பெரிய அளவில் ஹிட் அடித்து அப்போது முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்திடம் உதவி கேட்கிறார் எஸ் ஏசி.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு அடுத்த சோதனையா? மீண்டும் ஆரம்பிக்கும் இனியா மற்றும் எழில் பிரச்னை!…

அவர் கேட்டதுக்கு உடனே ஓகே சொல்லிய விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படத்தில் முக்கிய கேரக்டரில் விஜயிற்கு அண்ணனாக நடித்திருப்பார். அப்படம் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்தது. இதனால் விஜயகாந்துக்கு எப்போதும் விஜயின் மீது பாசம் அதிகமாம்.

விஜயகாந்த் இறந்தன்று கூட இரவு நேரத்தில் வந்து கண்ணீர் மல்க நின்ற விஜய் பலருக்கு புதுசு தானாம். அப்படி இருக்க அவரை தன்னுடைய கேரியரின் கடைசி படங்களில் நடிக்க வைக்க விஜய் ஆசைப்பட்டாராம். இதை வெங்கட் பிரபுவிடம் சொல்ல அவருக்கும் அது சரியான விஷயமாக தோன்றியதாம். இதற்காக கேப்டன் வீட்டுக்கு பலமுறை சென்று ஓகே வாங்கி வந்து இருக்கிறார் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க: மனோஜ் பிச்சை எடுத்தாச்சு…இனிமே விஜயா கரைஞ்சிடுவாங்களே… வீட்டுக்கு கிளம்பிய ஸ்ருதி!…

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily