×

நாங்க பேசுறது அவருக்கு புரியல... இனிமே இங்கிலீஸ்தான் - முதல்வரை கலாய்த்த துரை முருகன்

திமுக பொருளாளர் துரை முருகன் வேலூர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார். வேலூர் தொகுதியில் குடிநீர் பிரச்சனை மற்றும் சாலை வசதி ஆகியவற்றை சரி  செய்து கொடுக்குமாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
 

அதன்பின் செய்தியாளர்கள் அவரிடம் ‘குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தி.மு.க.விடம் கேள்வி எழுப்பி இருந்தாரே?’ எனக் கேட்டனர்.

இதற்கு பதில் கூறிய துரைமுருகன் ‘ குடியுரிமை சட்டம் பற்றி இதுநாள் வரை எடப்ப்பாடி பழனிச்சாமியிடன் தமிழில் பதில் அளித்து வந்தோம். இது அவருக்கு புரியவில்லை என நினைக்கிறேன். இனிமேல் அவரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்போம்’ என அவர் பதில் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News