×

குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி ? அடடே... அறிவு ஜீவியின் அசத்தலான ஐடியா!

இனிமையான பேச்சு மற்றும் காமெடி கலந்த கலாய் இவருக்கு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

 

தொடர்ந்து சன் டிவி, சன் நியூஸ் என்று பல நிகழ்ச்சிகளில் முகம் காட்டிய அவர் விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். இதற்கிடையில் ஊரடங்கில் சில மாதங்களாக கிராமம் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே நிலா சோறு சாப்பிடுவது , மாட்டிற்கு வைக்கோல் கொடுப்பது, நொண்டி விளையாடுவது , முறுக்கு சுடுவது என பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு சென்னைக்கு வந்த மணிமேகலை தற்ப்போது கணவருடன் சேர்ந்து யூடியூபில் வீடியோ வெளியிடுவது உள்ளிட்ட வேளைகளில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது  குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி ? என கேப்ஷன் கொடுத்து ஹெல்மெட் அணிந்துகொண்டு சமைக்கும் வீடியோவை வெளியிட்டு நக்கல் அடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News