×

கவுண்டமணியின் வார்த்தையை பின்பற்றிதான் இந்த அளவுக்கு உயர்ந்தேன் – யோகி பாபுவின் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு தனது வளர்ச்சிக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு தனது வளர்ச்சிக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வரவேண்டும் என நினைப்பவர்கள் எல்லோருக்குமே கவுண்டமணி ஆதர்ஸமானவர். அந்த அளவுக்கு அவர் எல்லோர் மனதிலும் தாக்கத்தை செலுத்தியவர். அந்த வகையில் யோகி பாபுவுக்கும் கவுண்டமணிதான் ஆதர்ஸமாம்.

தற்போது ஒரு நாளைக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் அவர், தன்னுடைய இவ்வளசு பெரிய முன்னேற்றத்துக்குக் காரணம் கவுண்டமணியின் அட்வைஸ்தான் என சொல்லியுள்ளார். கவுண்டமணி கூறிய ‘எப்போதும் குறிக்கோள் மற்றும் கனவை நோக்கி ஓட வேண்டும், திரும்பி பார்க்கக் கூடாது’  என்று கூறிய அறிவுரையைப் பின்பற்றிதான் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News