×

டிவில்லியர்ஸ் அணியில் இணைய வேண்டுமானால்… இதை செய்ய வேண்டும் – மார்க் பவுச்சர் கண்டீஷன் !

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் மீண்டும் அணியில் இணைய ஒரு நிபந்தனையை விதித்துள்ளார் மார்க் பவுச்சர்.

 

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் மீண்டும் அணியில் இணைய ஒரு நிபந்தனையை விதித்துள்ளார் மார்க் பவுச்சர்.

தென் ஆப்பிரிக்க அணியின் சூப்பர் ஸ்டார் ஏ பி டிவில்லியர்ஸ் 2018 ஆம் ஆண்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யும் விதமாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்தது. ஆனால் அதன் பின் புதிதாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மார்க் பவுச்சர் மீண்டும் அவரை அணியில் கொண்டுவர ஆசைப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் ‘ஐபிஎல் தொடருக்குப் பின்னான இலங்கை தொடரில் அவர் இணையவேண்டும். அப்போதுதான் அவரை 2020 உலகக்கோப்பை தொடரில் சேர்ப்பது குறித்து யோசிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News