×

இந்தியன் 2 விபத்து ; கமல் எழுதிய கடிதம் : லைக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்திற்கு லைக்கா நிறுவனம் பதில் அனுப்பியுள்ளது.
 

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்காவுக்கு அப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்,  படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களை பாதுகாப்பது நம் கடமை. எனவே, கலைஞர்கள், படக்குழுவினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவர்கள் மீது காப்பீடு செய்யுங்கள்.  பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், லைக்கா நிறுவனம் கமலுக்கு பதில் அனுப்பியுள்ளது. அதில், தொழிலாளர்களுக்கு எதுவும் நடக்காமல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவர் மீதும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News