Connect with us
vidamuyarchi

Cinema News

என்னது! விடாமுயற்சியில த்ரிஷா இவ்வளவு நேரம்தான் வருவாங்களா?.. இதுக்கா இம்புட்டு அக்கப்போரு!..

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை திரிஷா எவ்வளவு நேரம் வருவார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகியும் இவரின் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் அஜித் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார்.

இதையும் படிங்க: குடும்பத்துக்கே ஷாக்கா? கோபியை தேடும் ராதிகா… பாண்டியனின் மனமாற்றம்

இயக்குனர் மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த திரைப்படம் தள்ளிப்போய் கடைசியாக மகிழ்திருமேனி கையில் சேர்ந்தது. இந்த திரைப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து அர்ஜுன், ஆரவ், த்ரிஷா, ரெஜினா உள்ளிட ஏராளமான பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் விடாமுயற்சி என்ற படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுடன் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

அஜர்பைஜான் நாட்டில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை மாற்றம் காரணமாக படம் தொடர்ந்து தடைப்பட்டு வருவதாக மட்டுமே தகவல் வெளியாகி வந்தது. இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக முடிவடைந்துவிட்டது.

trisha

trisha

ஆனால் இன்னும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் பாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று இரவு 11 மணிக்கு இப்படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் டீசரில் கார் ரேசிங், அதிரடியான ஆக்சன் காட்சிகள் என ஹாலிவுட் திரில்லர் பாணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. அதிலும் இந்த டீசரில் வரும் ‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு’ பெரும் அளவு கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் படத்தில் நடிகை திரிஷா குறைந்த அளவு நேரம் மட்டுமே வருவார் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் படத்தின் ஆரம்பத்தில் முதல் 20 நிமிடங்களும், கடைசியில் 10 நிமிடங்கள் மட்டுமே திரையில் நடிகை திரிஷா தோன்றுவார் என்றும், ஒரு கேமியோ கதாபாத்திரம் போல் தான் நடிகை திரிஷாவின் பங்கு இந்த திரைப்படத்தில் இருக்கின்றது என்று சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: நம்புறது ஜோசியம்!. ஆனா டீசர்ல ‘உன்னை நம்பு’… விடாமுயற்சி டீமை வெளுக்கும் ரசிகர்கள்!..

இந்த செய்தி திரிஷா ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் நடிகை திரிஷா இந்த திரைப்படத்தில் இணைந்ததிலிருந்து படக்குழுவினருக்கும் திரிஷாக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த கதாபாத்திரத்திற்காகவா இவ்வளவு சண்டை போட்டீர்கள் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top