×

நகுலின் மனைவியா இவர்?... யாரோ நடிகைன்னு நினைச்சுட்டோம்!... வெறித்தனமாக டிரெண்ட் ஆகும் வீடியோ...

 

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தில் 4 பேர்களில் ஒருவராக நடித்தவர் நகுல். மிகவும் குண்டாக இருந்த அவர் டயட் மற்றும் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை குறைத்தார். அதன்பின் அவருக்கு காதலில் விழுந்தேன் பட வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தின் வெற்றி அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது. எனவே, மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா, நாரதன் என பல படங்களில் நடித்தார்.

அதன்பின் ஸ்ருபி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்ருதி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர், யுடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலம் ஆனவர். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு மகள் பிறந்தார். 

இந்நிலையில், அழகான மேக்கப்பில் நிற்கும் ஸ்ருபியை ஒருவர் எடுத்த வீடியோவை ஸ்ருபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட பலரும் அவரை யாரோ பிரபல நடிகை என நினைத்து விட்டனர். காரணம் அந்த வீடியோவில் அவர் அவ்வளவு அழகாக இருந்தார் என்பதுதான் காரணம். இந்த வீடியோவை பார்த்த பலரும் ‘நீங்கள் சினிமாவில் நடிக்கலாம்’ என தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News