×

தெலுங்குக்குப் போகும் தமிழின் கவர்ச்சி பாம்... உற்சாகத்தில் டோலிவுட் ரசிகர்கள்

கோலிவுட் நடிகை ஐஸ்வர்யா மேனன் ரவி தேஜா படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 

தமிழில் தமிழ் படம் - 2, நான் சிரித்தால், தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களிலும் மலையாளத்தில் மான்சூன் மேங்கோஸ், கன்னடத்தில் நமோ பொத்தம்மா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா மேனன். ஹைஜோன் கிளாமரால் இவருக்கென தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 


இன்ஸ்டா, ட்விட்டர் என சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கு ஐஸ்வர்யா, அவ்வப்போது பகிரும் படங்கள் லைக்ஸை அள்ளும். தினசரி குறைந்த ஒரு படமாவது இவரது சோசியல் மீடியா ஹேண்டில்களில் வந்து விழுவதைப் பார்க்கலாம். அந்த போட்டோக்கள் வைரலாகவும் செய்யும். இன்ஸ்டாவில் மட்டும் 20 லட்சம் பேர் இவரைப் பின்தொடருகிறார்கள்.


அம்மணி தமிழ், மலையாளம், கன்னடத்தில் நடித்திருந்தாலும் டோலிவுட்டில் நடித்ததில்லை. அந்தக் குறை இப்போது தீரப்போகிறதாம். `மாஸ் மகாராஜா’ என்று டோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரவி தேஜா அடுத்ததாக கமர்ஷியல் இயக்குனர் திரிநாதா ராவுடன் இணைந்து ஒரு படம் பண்ணுகிறார். #RT68 என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா மேனன் மற்றும் கன்னட ஹீரோயின் ஸ்ரீலீலா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.      

From around the web

Trending Videos

Tamilnadu News