நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் புதிய படத்தை இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் என்ன ஆனது? படத்துக்கு பூஜை போடப்பட்டதா? இல்லையா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
பயங்கர நிதி நெருக்கடியில் இருக்கும் லைகா நிறுவனம் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு பட்ஜெட் ஒதுக்குவதற்கே ஆறு மாத காலம் போராடி வரும் நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் படத்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: படத்துலதான் அப்படின்னா!.. நிஜத்துலயுமா?. காதலியை பிடித்து தள்ளி விட பார்த்த வில்லன் நடிகர்!..
கூடிய விரைவில் லைகா நிறுவனம் படங்களை தயாரிக்கும் பணியை நிறுத்திவிட்டு தங்களது தொழிலில் மட்டும் கவனம் செலுத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றால் லைகாவுக்கு பேரிடியாக அமைந்து விடும் என்கின்றனர்.
இந்த விஷயங்களை எல்லாம் அறிந்துகொண்ட ஜேசன் சஞ்சய் தற்போது வேறு சில தயாரிப்பு நிறுவனங்களை நாடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதான சும்மா இது நடக்குமா?! SK – சீமான் சந்திப்புக்கு பின்னனியில் இருக்கும் காரணம் இதுதான்!…
நடிகர் விஜயின் அட்மின் ஜெகதீஷ் ‘ தி ரூட்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான மகாராஜா படத்தையே அந்த நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டது.
மேலும், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட சில படங்களையும் அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு லைகா நிறுவனத்தை நம்பி பல மாதங்களை ஜேசன் சஞ்சய் வீணடித்து விட்டார் எனக் கூறுகின்றனர். இந்தியன் 2 மற்றும் வேட்டையன் படங்கள் அடுத்தடுத்தடுத்து வெற்றிப் பெற்றால், லைகாவிலேயே ஜேசன் சஞ்சய் படம் பண்ணவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தனுஷ் அதை செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல!.. நெகிழும் வில்லன் நடிகர்…
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…