Categories: Cinema News latest news

என்ன ரஜினி இப்படி வந்திருக்கீங்க? கலைஞர் கேட்ட ஒரு கேள்வி – மறு நாளே ஆச்சரியப்படுத்திய சம்பவம்

Kalignar Karunanithi: தமிழுக்கு இவரால் பெருமையா? இவரால் தமிழுக்கு பெருமையா? என்று சொல்ல முடியாத வகையில் கலைஞர் கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாத அளவில் சினிமாவில் இவருடைய அர்ப்பணிப்புகள் ஏராளம்.

ஆர்ப்பறிக்கும் வசனங்கள், கதை எழுதுவதில் வல்லவர் என கருணாநிதியின் வரிகளில் ஏகப்பட்ட வசனங்களை நாம் கண்டுகளித்திருக்கிறோம். அதே வகையில் அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினாலும் சினிமாவை ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை கலைஞர் கருணாநிதி.

இதையும் படிங்க: சின்ன பட்ஜெட்டில் மீண்டும் ஹிட் அடித்திருக்கும் கோலிவுட்.. ஹரிஷ் கல்யாண் பார்க்கிங் சுவாரஸ்யம்.. என்ன சொல்கிறது ரிப்போர்ட்..?

கலையையும் கலைஞர்களையும் தன் இரு கண்களாகவே பார்த்தார் கலைஞர். சினிமா கலைஞர்களின் மீது எந்தளவு அக்கறை கொண்டிருந்தார் கலைஞர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறினார் சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

ஒரு விழாவிற்கு கலைஞரும் ரஜினியும் கலந்து கொண்டார்களாம். அப்போது ரஜினி வெள்ளை நிறத் தாடியுடன் மிகவும் சாதாரணமாக வந்து  நின்றாராம். அதை பார்த்ததும் கலைஞருக்கு ஒரு வித உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: சும்மா ஜிவ்வுன்னு இழுக்குது!.. தூக்கலான கவர்ச்சியில் அசத்தும் கயல் ஆனந்தி…

உடனே அருகில் இருந்த கலைப்புலி எஸ்.தாணுவிடம் கலைஞர் ‘ஏன் ரஜினி இப்படி வந்திருக்கிறார்? ஒரு பொது வெளியில் வரும் போது உச்சத்தில் இருக்கும் ஒருவர் இப்படியா வருவது? இதே எம்ஜிஆர் என்றால் பொது வெளியில் வரும் போது எப்படி தன்னை தயார் படுத்துவார் தெரியுமா? அடுத்த  முறை வரும் போது இப்படி வெள்ளை நிற தாடியில் வரக் கூடாது அல்லது தாடியை ஷேவ் செய்து விட்டாவது வரச் சொல்’ என கூறினாராம்.

இதற்கேற்றாற்போல இந்த சம்பவம் நடந்த இரு தினங்கள் கழித்து குட் லக் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றாராம் ரஜினி. அங்கு படம் பார்த்து முடித்துவிட்டு கலைஞர் வந்து கொண்டிருந்தாராம். கலைஞரை பார்த்ததும் ரஜினி ‘தன் இரு கன்னங்களையும் காட்டி  நீங்கள் சொன்னாற் போல தாடியை ஷேவ் செய்து விட்டேன் பாருங்க’ என கூறி மாறி மாறி தடவி காட்டினாராம்.

இதையும் படிங்க: ஜெயிலர் ஹிட்டுக்கு பின் நெல்சன் ப்ளான் இதுதானா? ஆனா கோலிவுட் இல்லையாம்.. என்ன ஜி இப்படி?

இதை கலைப்புலி எஸ். தாணுவிடம் கலைஞர் ‘இதென்னய்யா அந்த ரஜினி குழந்தை மாதிரி கன்னத்தை தடவி தடவி காட்டுறான். நான் சொல்லி செஞ்சது எனக்கு சந்தோஷம்தான். இருந்தாலும் சின்னக் குழந்தை போல இருக்கிறார்’ எனக் கூறினாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini