Categories: Cinema News latest news

ஒரே படத்தில் வில்லனாக நடித்த ரஜினி, கமல்! அப்போ ஹீரோ யாரு? சொன்னா ஆச்சரியப்படுவீங்க

Moonru Mudichu: தமிழ் சினிமாவில் ரஜினி,கமல் என இருவரையும் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர். ஆரம்பகாலங்களில் இருந்தே இவர்களின் நட்பு பாராட்டப்பட்டு வருகிறது. தொழில் முனையில் போட்டி இருந்தாலும் உள்ளுக்குள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு இருந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் பல படங்களில் கமலுக்கு வில்லனாகவே நடித்து வந்தார் சிவாஜி. இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் ஒரே படத்தில் ரஜினியும் கமலும் வில்லனாக நடித்ததை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இதையும் படிங்க: அந்த அழகை பாத்து சொக்கி போயிட்டோம்!.. ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் ஸ்ருதி ஹாசன்…

ஆம். மலையாளத்தில் வின்செண்ட், ரோஜாரமணி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க கமல் வில்லனாக நடித்து வெளியான படம்  ‘மற்றொரு சீதா’. இந்தப் படத்தில் ஒரு கொடூர வில்லனாக நடித்திருந்தாராம் கமல். இது ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக்.

படத்தின் கதைப்படி ஹீரோயின் வேறொருவரை காதலித்துக் கொண்டிருக்க அவள் மீது கமலுக்கு ஆசை ஏற்படுகிறது. தன் ஆசையை அடைய ஹீரோவையே தீர்த்துக் கட்டுகிறார் கமல்.

இதையும் படிங்க: லியோ ஆடியோ ரிலீஸில் நடக்க இருந்த போராட்டம்… நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது சுயநலத்துக்கு தானா?

கமலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக கமலின் அப்பாவையே ஹீரோயின் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி கமல் வருத்தப்படுகிறார்.

இந்தப் படத்தை தமிழில் எடுக்க பாலசந்தர் முற்படுகிறார். அந்தப் படம்தான் ‘மூன்று முடிச்சு’. இதில் மலையாளத்தில் ஹீரோவாக நடித்த வின்செண்ட் கதாபாத்திரத்தில் கமல் நடித்தார். மலையாளத்தில் வில்லனாக நடித்த கமல் கதாபாத்திரத்தில் ரஜினி தமிழில் நடித்தார்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: கேண்ட்டீனுக்கே ஓட்டிங் வைத்த ராதிகா… கணேஷிடம் சிக்கிய அம்ருதா ஆதாரம்!

ஹீரோயினாக ஸ்ரீதேவி நடித்தார். இந்தப் படம் தமிழிலும் பேய் ஹிட்டானது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini