லியோ ஆடியோ ரிலீஸில் நடக்க இருந்த போராட்டம்… நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது சுயநலத்துக்கு தானா?

Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு பின்னர் பல முக்கிய காரணங்களும் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது சினிமா வட்டாரத்தினையே அதிர்ச்சியாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கும் படம் லியோ. இப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். படம் இப்டி இருக்குமா அப்டி இருக்குமா என பலரும் வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஸ்மைலி பந்தை வைத்து இப்படியும் பயமுறுத்த முடியுமா?.. திகிலை கிளப்பிய ஜெயம் ரவியின் இறைவன் சீன்!..

ஜெய்லர் வெற்றியை முறியடிக்கும் பொருட்டு படக்குழு மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். படத்தினை தயாரித்து இருக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தன்னுடைய எக்ஸ் கணக்கில் 30 நாட்கள் 30 அப்டேட் என லியோ படத்துக்கு ஒரு ஸ்பெஷல் ஃபீஸ்ட் கொண்டாட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அப்டேட் வந்தது.

ஆனால், கடந்த 2 நாட்களாக எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நேற்று செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் பாஸ் அதிகமாகி வருவதாலும், பாதுகாப்புக்காகவும் லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தனர். இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால் இந்த விஷயத்துக்கு பின்னர் சில அதிர்ச்சி விஷயங்கள் இருக்கிறதாம். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது, லியோ ரிலீஸ் நிகழ்ச்சியின் பாஸ்களை மக்கள் இயக்கத்தினரே 5 ஆயிரத்துக்கும், 10 ஆயிரத்துக்கும் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: கேண்ட்டீனுக்கே ஓட்டிங் வைத்த ராதிகா… கணேஷிடம் சிக்கிய அம்ருதா ஆதாரம்!

இப்படி ஒரு விஷயம் நடந்தால் அது விஜயின் கேரியரில் மிகப்பெரிய அவமானமாக அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியே வேண்டாம். அது படத்துக்கு பின்னடைவாகி விடும் என்ற முடிவுக்கு படக்குழு வந்ததாக கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story