Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயனை வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் எடுக்கும் கமல்?.. குற்றச்சாட்டுகளை அடுக்கும் பிரபலம்!..

காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக அந்த படத்தை வரவேற்றது. 12 வருஷத்துக்கு முன்னாடி கமல்ஹாசன் எடுத்த விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்கிற மனநிலைக்கு கொண்டு சென்றது.

அதே போல சிவகார்த்திகேயனை வைத்து கமல் தயாரித்துள்ள அமரன் படமும் அதே போல இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் படம் தான் என வலைப்பேச்சு பிஸ்மி குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

இதையும் படிங்க: கதையே தெரியாமத்தான் இத்தனை நாள் சுத்திட்டு இருக்கியா!.. பிரபல ஹீரோவை பங்கமா கலாய்த்த விஜய்!..

இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என சித்தரிக்கும் படங்களுக்கும் அரபு நாட்களில் ரிலீஸ் செய்ய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சிலர் பாஜக அரசை மகிழ்விக்க இதுபோன்ற படங்களை பாலிவுட் முதல் கோலிவுட் வரை தொடர்ந்து எடுத்து வருகின்றனர் எனக்கூறியிருக்கிறார் பிஸ்மி.

விஜயகாந்த், அர்ஜுன் என அந்த காலத்துலயே இந்த கதையை கூடுமானவரையில் எடுத்து தீர்த்து விட்டனர். விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் விஷயம் சொல்லப்பட்டபோது பெரும் சர்ச்சை வெடித்தது.

இதையும் படிங்க: அருண் விஜய்யை அடி வெளுத்த பாலா!.. வணங்கான் வந்தா பெரிய சர்ச்சை வெடிக்கும்.. பிரபலம் சொன்ன தகவல்!..

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் அதே போல ஏகப்பட்ட சர்ச்சைகளையும் இஸ்லாமிய  விரோதத்தையும் தான் வளர்க்கும் என பிஸ்மி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் பயோபிக் என்கிற பெயரில் கமல் செய்துள்ள சூழ்ச்சி தான் இந்த அமரன் என்றும் பிஸ்மி பேசியிருக்கிறார்.

 

 

 

Saranya M
Published by
Saranya M