Categories: Cinema News latest news

எவ்ளோ பில்டப் பண்ணாலும் பிசினஸ் ஆகமாட்டுதே!.. சூர்யாவை கதறவிடும் கங்குவா?.. என்ன ஆகுமோ?..

சூர்யாவின் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மே மாதமே வந்து விட்ட நிலையில், இன்னமும் அந்த படம் எப்போது வெளியாகும் என்கிற அறிவிப்பை வெளியிடவில்லை. கங்குவா படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில், கங்குவா டீசர் வெளியானது.

ஆனால், அதற்கு போதிய அளவு எதிர்பார்ப்பு கிடைக்கவில்லை. மேலும், கங்குவா படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் அந்தளவுக்கு ரசிக்கும் படி துல்லியமாக இல்லை என்கிற விமர்சனங்கள் எழுந்த நிலையில், மீண்டும் அதனை ஃபைன் டியூன் பண்ண சூர்யா சொன்னதால் தான் படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அதிரடி காட்டும் அனுபமா பரமேஸ்வரன்!.. அடுத்தடுத்து இத்தனை படங்களில் கமிட் ஆகியுள்ளாரே!..

சூர்யா இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து தயாரித்துள்ள சூரரைப் போற்று இந்தி ரீமேக்கான சர்பிரா திரைப்படமும் இன்னமும் எப்போது ரிலீஸ் என்பதை அறிவிக்கவில்லை. சூர்யா கர்ணன் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக கூறப்படுகிறது.

வாடிவாசல், புறநானூறு படங்களை அறிவித்து விட்டு வணங்கான் படத்தில் இருந்து பாதியிலேயே துண்டை காணோம் துணியை காணோம் என ஓடியது போல இன்னமும் அந்த இரு படங்களையும் ஆரம்பிக்காமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜாலியா ஒரு படம் பண்ணலாம் என்கிற முடிவுக்கு சூர்யா வந்துள்ளார்.

இதையும் படிங்க: பாத்ததும் ஷாக் ஆயிட்டோம்!.. டிரெஸ்ஸே அப்படித்தானாம்!.. கிளுகிளுப்பு காட்டும் ஜான்வி கபூர்!..

பாஃப்டா தனஞ்செயன், ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்கள் தொடர்ந்து சூர்யாவின் கங்குவா படம் அப்படி வந்திருக்கு இப்படி வந்திருக்கு என பில்டப் செய்து வரும் நிலையில், எப்போது வரும் என்பதை மட்டும் இன்னமும் படக்குழு அறிவிக்கவில்லை.

சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் பல கோடி செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ள கங்குவா திரைப்படத்தின் ஓடிடி பிசினஸ், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இன்னமும் பெரிய தொகைக்கு விற்பனையாகவில்லை என்கின்றனர். இந்தியன் 2 படத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தான் கங்குவா படத்துக்கும் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினியின் புதுப்படத்தில் 2 டெரரான வில்லன்களா? வீரா போல மாஸ் காட்டுமாம் வேட்டையன்..!

Saranya M
Published by
Saranya M