Categories: Cinema News latest news

நீங்க அமைதியா இருக்கறது தப்பு.. கார்த்திக்கு குட்டு வைத்த ’பருத்திவீரன்’ குட்டி சாக்கு…

Karthi sivakumar: கோலிவுட்டில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து இயக்குனர்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக ட்வீட் போட்டும் பேசியும் வருகின்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட கார்த்தி இதுகுறித்து பேசாமல் இருப்பது தவறு என தற்போதைய குரல் வலுத்து இருக்கிறது.

அமீர் தன்னை ஏமாற்றி தனக்கு கொடுக்க வேண்டிய 1 கோடியே 65 லட்சத்தினை கொடுக்காமல் பருத்திவீரன் படத்தினை ரிலீஸ் செய்து விட்டனர் எனக் கூறினார். இதனை தொடர்ந்து ஞானவேல்ராஜா அமீரை யாரும் ஏமாற்றவில்லை. அவர் தான் செலவை இழுத்து விட்டார்.

அப்படத்தினை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் இயக்கி தருவதாக அக்ரிமெண்ட் போட்டோம். நான் அவருக்கும் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கும் இருக்கும் நட்பை கெடுத்து விட்டதாக கூறுகிறார். ஆனால் நந்தா படத்தில் இருந்தே அவருக்கும் சூர்யாவுக்கு உறவு சூமுகமாக இல்லை என ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்து இருந்தார்.

இதையும் படிங்க: சரோஜாதேவி எடுத்த தவறான முடிவு!.. மொத்தமா மார்க்கெட் போனதுதான் மிச்சம்!…

இதனால் பிரச்னை பத்திக்கொண்டது. ஞானவேல் ராஜாவின் இந்த பேச்சை கண்டித்த அமீர் இந்த பிரச்னை தெரிந்தவர்கள் கூட அமைதியாக இருப்பது ஆச்சரியமளிப்பதாக பேசினார். இதனால் இயக்குனர்கள் சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன் ஆகியோர் ஆதரவாக குரல் கொடுத்தனர். 

சமீபத்தில் சுதா கொங்கரா கூட அமீரை பாராட்டினார். பாரதிராஜா உங்களுக்குள் இருப்பது கடன் பிரச்னை தான். ஆனால் நீங்க பேட்டியில் கொடுத்து இருக்கும் ஸ்டேட்மெண்ட் எல்லாம் ஒரு கலைஞனை அவமதிப்பது போல இருப்பதாக அமீருக்கே தன் ஆதரவை தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் கார்த்தியுடன் குட்டி சாக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்த குட்டி பையன் விமல்ராஜ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், ஞானவேல் அவர்கள் பேசிய வீடியோவை பார்த்தேன். அதில் அமீர் மாமாவை பேசிய கண்டிக்கத்தக்கது. ரோட்டில் விளையாடிக்கொண்டு இருந்த என்னை நடிப்பு சொல்லி கொடுத்த அவர்மீது பழியை போடுவது வேதனை தருகிறது.

இதையும் படிங்க:இந்திப்பாடகியையே அழ வைத்த இளையராஜாவின் இசை… அவ்ளோ உருக்கமான பாடலாம்!..

படத்தினை பாதியிலேயே விட்டு போனவர்கள், அந்த படத்தினை முடிக்க அவர் பட்ட கஷ்டத்தினை நேரில் பார்த்தேன். மேலும், இது எனக்கும் கார்த்திக்கும் முதல் படம். அவரும் நடந்த அனைத்தினையும் நேரில் பார்த்தார். அவர் அமைதி காப்பது மிகவும் தவறான செயல் என்றும் ட்வீட் செய்து இருக்கிறார்.

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மையும், நாணும் இது மூன்றிலும் இருந்தும் விலகமாட்டார் எனவும் திருக்குறளையும் தன்னுடைய அறிக்கையில் சேர்த்து இருக்கிறார். அமீர் மற்றும் ஞானவேல்ராஜா விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வரும் ப்ளூசட்டை மாறன் இந்த அறிக்கையை தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆனால் குட்டிசாக்கு அந்த ஒரு படத்துடன் மூட்டைதூக்கும் வேலை செய்து வருகிறார். இது அமீர் ஆதரவாளர்களால் பொய்யாக உருவாக்கப்பட்ட அறிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாஸ் காட்டி வைரலான மீனா..! சைடு கேப்பில் காரியத்தினை சாதிக்க திட்டம் போட்ட விஜயா.. மீண்டும் ஆரம்பித்த ஸ்ருதி..!

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily