×

உடனே ஸ்பாட்டுக்கு வந்துட்டா... அல்லு அர்ஜூன் விளம்பரத்தால் கிளாப்ஸ் அள்ளிய கேரளா போலீஸ்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் படக் காட்சிகளைக் கொண்டு கேரளா போலீஸ் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு வீடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது. 
 

தெலுங்கின் முன்னணி நடிகரான `ஸ்டைலிஷ் ஸ்டார்’ என்றழைக்கப்படும் அல்லு அர்ஜூனுக்கு கேரளாவில் எக்கச்சக்க ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது. இவரது தெலுங்குப் படங்கள் டப் செய்யப்பட்டு கேரளாவில் வெளியிடப்படும்போது அவை டோலிவுட் அளவுக்கு வசூல் மழை பொழியும். அந்த வகையில், கேரள ஃபேன்ஸ் அல்லு அர்ஜூனை, `மல்லு’ அர்ஜூன் என்ற அடைமொழியுடன் அழைப்பதுண்டு. 

அல்லு அர்ஜூனின் பாப்புலாரிட்டியை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரளா போலீஸார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் கேரளா போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ள `POL - APP' அப்ளிகேஷன் குறித்த வீடியோவாக அது வெளிவந்திருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து பொதுமக்கள் அவசர காலங்கள், புகார் ஆகியவற்றின்போது போலீஸின் உதவியை நாடலாம். இதுகுறித்த கேரளா போலீஸின் வீடியோ நெட்டிசன்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News