Categories: Cinema News latest news

ரஜினி சம்பளம் 40 கோடியாம்!.. லால் சலாம் முதல் வசூல் எவ்வளவு தெரியுமா?.. லைகா தலையில துண்டு தான் போல!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருஷம் கழித்து ஆசை ஆசையாக இயக்கிய லால் சலாம் திரைப்படம் முதல் நாளே தியேட்டர்கள் காத்து வாங்கும் நிலைமைக்கு வந்து நின்றது பெரும் அதிர்ச்சியை லைகா நிறுவனத்துக்கு ஏற்படுத்தியது. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கூடிய கூட்டம் கூட முதல் நாள் படம் பார்க்க போகலையா என நினைத்து அப்செட் ஆகி விட்டது லைகா நிறுவனம்.

ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதே மாஸை காட்டி டப்பை வசூல் செய்து விடலாம் என ரஜினிகாந்தும் அவரது மகளும் போட்ட திட்டம் இப்படி ஃபெயிலியராக போய் விட்டதே என சினிமா உலகமே பின்னாடி பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். சிலர், முன்னாடியும் நக்கலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்யை தொடர்ந்து ரஜினியையும் வம்பிழுத்த விஷால்!.. என்ன இப்படி சொல்லிட்டாரு!..

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லால் சலாம் படத்தை தோல்வி அடைய வைக்க எல்லா விஷயங்களையும் ரஜினியே பண்ணது தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.

கேமியோ கதாபாத்திரத்தை விட விக்ராந்தின் தந்தையாகவே ஒரு துணை நடிகராகத்தான் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். லால் சலாம் படத்துக்கு ஒரு வாரம் நடித்ததற்கு சூப்பர் ஸ்டாருக்கு சம்பளமாக 40 கோடி ரூபாயை லைகா நிறுவனம் வழங்கியது என தகவல் வெளியானது. அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: ஒல்லியா இருக்காருன்னு பார்த்தா!.. பெல்லியை வச்சு இப்படி டான்ஸ் ஆடுறாரே!.. பிரதீப் யோகக்காரன் தான்!..

ஆனால், லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் 4 கோடி ரூபாய் வரக் காரணமும் ரஜினிகாந்தின் கேமியோ மட்டும் தான். வெறும் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடித்திருந்தால், முதல் நாள் 1 கோடிக்கும் குறைவாகத்தான் வந்திருக்கும் என்கின்றனர். சனி மற்றும் ஞாயிறு பிக்கப் ஆனால் தான் உண்டு. இல்லை என்றால் திங்கட்கிழமை மொத்தமும் வாஷ் அவுட் ஆகிவிடும் எனக் கூறுகின்றனர்.

Saranya M
Published by
Saranya M