Connect with us

Cinema News

லியோவோட உண்மையான வசூல் இதுதான்!.. புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த பிரபலம்!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 5 வாரங்களை கடந்தும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் 540 கோடி என்பது வரை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ 3 வாரத்தின் முடிவில் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், லியோ படத்தின் மொத்த வசூல் இதுதான் என வலைப்பேச்சு பிஸ்மி ஒரு செம ரிப்போர்ட்டுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அட்லீ, லோகேஷை மறைமுகமாக தாக்கிய பிரதீப்! – என்னடா இயக்குநர்களுக்கு வந்த சோதனை..

லியோ படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்திருந்தது. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலி கான், கெளதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

மாயா மற்றும் ஜார்ஜ் மரியத்தை உள்ளே கொண்டு வந்து எல்சியூ கேமையும் லோகேஷ் கனகராஜ் ஆடியிருந்தார். கிளைமேக்ஸில் கமல் மாஸ்க் போட்டுக் கொண்டு கோஸ்ட்டாகவும் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ராதா மகள்!.. கோ பட ஹீரோயின் கார்த்திகா நாயர் திருமணம்.. 80ஸ் பிரபலங்கள் மொத்தமும் ஆஜர்!..

இதுவரை இல்லாத அளவுக்கு படத்தில் எமோஷனல் நடிப்பை நடிகர் விஜய் வெளிப்படுத்திய விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆரம்பத்தில் இடம் பெற்ற ஹைனா காட்சியுடன் படம் அமோகமாக தொடங்கி இடைவேளை வரை பரபரப்பாக சென்ற நிலையில், இடைவேளைக்குப் பிறகு வந்த லியோ தாஸின் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் லோகேஷ் கனகராஜ் கோட்டை விட்டதாக விமர்சனங்கள் குவிந்தன.

ஆனால், விஜய்யின் ஆக்டிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்ற நிலையில், வசூலில் பெரியளவில் படம் கல்லா கட்டியது.

இதையும் படிங்க: காக்கா – கழுகு கதை.. சூப்பர்ஸ்டார் பட்டம்.. லெஜெண்ட் சரவணா என்ன சொல்றாரு பாருங்க!..

இந்நிலையில், படத்தின் பட்ஜெட் 300 கோடி என்றும் வட்டியெல்லாம் சேர்ந்து 335 கோடி என்றும் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக லியோ படத்தின் வசூல் 205 கோடி ரூபாய் என்றும் முதல் நாள் வசூல் மட்டும் 34 கோடி ரூபாய் என்றும் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக உலகளவில் 585 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது என்றும் 600 கோடி ரூபாய் வசூலை லியோ இதுவரை எட்டவில்லை என்றும் பிஸ்மி போட்டு உடைத்துள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top