Connect with us
mari

Cinema News

எவிடெண்ட்ஸ் காட்டுங்க! கேள்வி கேட்ட நிருபரிடம் கொந்தளித்த மாரி செல்வராஜ்

Mariselvaraj: பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் போன்ற தரமான படங்களை கொடுத்ததன் மூலம் இன்று சினிமாவில் கவனம் பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார். சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் அப்படியேதான் இருக்க வேண்டுமா? எதிர்த்து கேள்விகள் கேட்கக் கூடாதா என்ற வகையில் தன் படங்களின் மூலம் ஒரு புரட்சியே செய்து வருகிறார் மாரி செல்வராஜ்.

இவர் எடுத்த மூன்று படங்களுமே அப்படியான ஒரு வரைமுறைக்குள்தான் வந்திருக்கும். ஆனால் பரியேறும் பெருமாள் படத்தை தவிர கர்ணன், மாமன்னன் போன்ற படங்களில்தான் மக்கள் தான் படும் வலிக்கு திருப்பி கொடுக்கும் படியான திரைக்கதையை அமைத்திருப்பார் மாரி செல்வராஜ்.

இது ஒரு பக்கம் எழுச்சியை ஏற்படுத்தினாலும் இன்னொரு பக்கம் பெரும் பேசு பொருளாகவே மாறி வருகிறது. ஏனெனில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்க முன்பு இருந்த அந்த அடிமைத்தனம் இப்போது குறைந்ததாகவே பார்க்கப்படுகிறது என பல பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இவ்ளோ பேர் பாராட்டியும் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?!.. வாழை படத்தின் இரண்டு நாள் வசூல்!…

இந்த நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. தன் இளமைக்காலத்தில் பட்ட அவமானங்கள், போராட்டங்களை மையப்படுத்தி தன்னுடைய ஒரு சிறிய பயோபிக்காகவே மாரிசெல்வராஜ் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். படம் பார்த்த பிரபலங்களில் அழாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

இயக்குனர் பாலா படத்தை பார்த்து மாரி செல்வராஜை கட்டியணைத்து அவருடைய எமோஷனை வெளிப்படுத்தினார். பாரதிராஜாவும் படம் பார்த்து தன் கண்களில் கண்ணீர் வந்தது என கூறியிருந்தார். இப்படி வாழ்வியல் சார்ந்த ஒரு படமாக இந்த வாழை திரைப்படம் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: படக்குழுவே சொல்லாத அப்டேட்! கோட் பட சீக்ரெட்டை இப்படி உடைச்சிட்டாரே மீசை ராஜேந்திரன்

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மாரிசெல்வராஜிடம் நிருபர் ஒருவர் ‘அடிக்கடி வலி வலி என்று சொல்கிறீர்கள். ஆனால் அதற்கான சூழ்நிலை சமீபகாலமாக இல்ல’ என கேட்க, அதற்கு மாரி செல்வராஜ் ‘சரி அதற்கான எவிடெண்ட்ஸ் கொடுங்க பாப்போம்’ என கேட்டார்.

மேலும் அவர் கூறும் போது கடைசி மூன்று அல்லது ஆறு மாத ரிப்போர்ட்டில் வன்கொடுமை எடுத்துப் பாருங்கள். சும்மா கேள்வி கேட்க வேண்டும் என்று கேட்க கூடாது. இவங்ககிட்ட இப்படித்தான் கேட்கனும், அவங்க கிட்ட அப்படித்தான் கேட்கனும் என கேட்கக் கூடாது.

இதையும் படிங்க: படப்பிடிப்புக்கு வரமுடியாமல் போன ஸ்ரீபிரியா! பதிலுக்கு இயக்குனர் கொடுத்த பரிசு

என்னைவிட ஒரு ரிப்போர்ட்டரா உங்களுக்கு அதிகமாகவே தெரியும். வருடக் கணக்கில் இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் வருகின்றன. இன்னொரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். ஒரு டைரக்டர் படம் எடுக்கிறார் என்றால் அவருக்கு எதிராக என்ன மாதிரியான கேள்வி கேட்கனும் என கேட்கக் கூடாது என்றும் மாரிசெல்வராஜ் கூறினர்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top