Categories: Bigg Boss Cinema News latest news television

ப்ரதீப்புக்கு அடுத்த பலியாடு லோகேஷா?… உஷார் சாரே.. மாயாவின் அடுத்த ஸ்கெட்ச் இவருக்கு தான்..!

Maya Krishnan: தமிழ் பிக்பாஸ் சீசன் 7ல் தற்போது கலந்து கொண்டு விளையாடி வரும் மாயா கிருஷ்ணன் அடுத்து ரெட் கார்டை லோகேஷுக்கு கொடுக்க இருப்பதாக ரசிகர்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதுகுறித்து விசாரிக்கும் போது ஒரு சில விஷயங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த சீசன் தொடங்கியதில் இருந்து வைரலாகி வரும் இரண்டு பெயர் மாயா மற்றும் பூர்ணிமா தான். முதல் சில வாரங்களில் ப்ரதீப்புக்கு ரசிகர்கள் இருக்கவே மாட்டாங்க. அவருக்கு கை தட்டல் வந்தால் நானே ஷோ விட்டு வெளியேறிவிடுவேன் என்றார். அப்படி கைத்தட்டல் வந்த போது அவர் முகமே தொங்கியது. இதனால் அவரை உறவாடி கெடுக்க முயன்றார். 

இதையும் படிங்க: தாலி கட்டும் நேரத்தில் விரைந்த போலீஸார்! அந்த நடிகர் கொடுத்த புகார் – அதிரிபுதிரியாக நடந்த போண்டாமணி திருமணம்

அதனை தொடர்ந்து ப்ரதீப்பை தன் அண்ணனாக ஏற்றுக்கொண்டார். அவர் அருகில் இருப்பதே ஆபத்து என்றவர். அவருக்கு கையில் முத்தம் கொடுத்த கூத்தெல்லாம் நடந்தது. ஆனால் அதிரடியாக வீக் எண்ட் எபிஷோட்டில் அவர் மீது பழியை போட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார். இதை தொடர்ந்து அவர் மீது நெகட்டிவிட்டி அதிகமானது.

எப்போ மாயா மற்றும் பூர்ணிமா வெளியேறுவார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் அவரை கமல் கேள்வியே கேட்காமல் தடவி கொடுத்து திட்டுகிறார். பூர்ணிமாவிடம் காட்டும் கடுமையான முகத்தினை கூட மாயாவிடம் காட்டவில்லை. அதற்கே கமலை ரசிகர்கள் அதிகம் விமர்சிக்கின்றனர்.

இதையும் படிங்க: மச்சினியிடம் கதையை திருடினாரா தனுஷ்.. நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்..!

தப்பிச்சுரு கைப்புள்ள என்ற லெவலில் அவருக்கு அட்வைஸை பறக்க விட்டுள்ளனர். இதற்கு முன்னர் பூர்ணிமாவின் நெருங்கிய தோழியான இந்திரஜா உள்ளே வந்து அவரிடம் முகம் காட்டவே இல்லை. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது அவர் சிலதை மாற்றிக்கணும் என்றார். அதுபோல, லோகேஷ் இனி மாயாவை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்காமல் இருப்பதே நல்லது எனவும் கூறிவருகின்றனர்.

Published by
Shamily