Connect with us

Bigg Boss

பயப்படலைனாலும் பயந்த மாதிரி காட்டிக்கோ!… மீண்டும் டீம் ஏவுடன் இணைந்த மாயா!… இதெல்லாம் ஓவர் மக்கா

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸிலேயே அதிக பட்ச நெகட்டிவை சந்தித்த போட்டியாளர்கள் தான் மாயா அண்ட் டீம். கிட்டத்தட்ட எல்லாரையுமே புல்லி கேங் என ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். தற்போது அந்த கூட்டம் இன்னமும் ஒரு சேட்டையை செய்து இருக்கிறார்கள்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 முடிந்துவிட்டாலும் இன்னும் சர்ச்சை மட்டும் ஓயவே இல்லை. இந்த சீசனில் கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இரண்டு டீம் என்று ஓபனாகவே ஒப்புக்கொண்டனர். இதில் இரண்டாவது டீம் பெரிய சர்ச்சையில் சிக்கவே இல்லை. ஆனால் முதல் டீம் செய்தது தான் பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதையும் படிங்க: ரோகினிக்கு தயாரான முதல் ஆப்பு!… எப்பா ஆடியன்ஸ் சந்தோஷமா உங்களுக்கு!…

மாயா தன் தலைமையில் பூர்ணிமா, விக்ரம், நிக்சன், ஜோவிகா, அக்‌ஷரா, அனன்யாவை வைத்து கொண்டார். இதில் இவர்கள் அர்ச்சனாவிடம் வம்புக்கு செல்ல அதனால் இவர்களை மொத்த நெட்டிசன்களுமே புல்லி கேங் எனக் கலாய்க்க தொடங்கினார்.

ஆனாலும் டீமில் ஒருவர் கூட பைனலிஸ்ட்டாக வில்லை மாயாவை தவிர. இதில் மாயா முதல் ரன்னர் அப்பாக வருவார் என்று கூட சிலர் நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கையும் உடைக்கும் விதமாக டீம் பியின் அர்ச்சனா கப்பையும், மணி ரன்னர் அப்பையும் தட்டி சென்றனர்.

 

இந்த டீமின் அனைத்து போட்டியாளர்களுமே வெளியில் வந்து வரிசையாக பேட்டி கொடுத்து விட்டனர். இந்நிலையில் டீம் பியில் நிக்சனை தவிர மற்ற யாரும் இன்னமும் பேட்டி பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை. இந்நிலையில் மொத்த டீமும் மீண்டும் இணைந்து கூத்தடித்து இருக்கும் புகைப்படத்தினை நிக்சன் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: எப்பா தர்மபிரபு சீக்கிரம் இந்த மகா சங்கமத்த முடிச்சி விடுங்க.. முடியல எங்களால…

அதை ஷேர் செய்து இருக்கும் மாயா, கோத்தா படத்தில் வந்த பயப்படனாலும் பயந்த மாதிரி காட்டிக்கோ என்ற பாடலையும் சேர்த்து போட தற்போது எக்ஸ் தளத்தில் #MayaSquad என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Bigg Boss

To Top