×

மின்னல் வேகத்தில் தமிழக அரசு செயல்படுகிறது என்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால்தான்... ஆர்.பி. உதயகுமார்

தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்படுகிறது என்றால் அது முதல்வர் எடப்பாடி பழனிசாமியால்தான் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். 
 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 30. 52 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் காக்க 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 12,110 கோடி மதிப்பில் பயிர்க் காப்பீடு கடனை ரத்து செய்தார். மின்னல் வேகத்தில் அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் அது எடப்பாடியால்தான் முடியும். 

கொரோனா காலத்தில் 38 வருவாய் மாவட்டங்களிலும் எனது உயிரை விட மக்கள் நலனே முக்கியம் என அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் கோட்டையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார். மக்கள் குறை தீர்க்கும் முகாம் என்ற போர்வையில் பெட்டிக்குள், பெட்டி வைத்து பூட்டு போட்டு அதனை அறிவாலயத்தில் கொண்டுபோய் வைப்பார்களாம். அப்படி என்றால் அறிவாலயத்தில் இருக்கக்கூடியவர்கள் மீது நம்பிக்கை இல்லையா எதற்காகப் பூட்டு போடுகிறார்கள்" என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News