தளபதி 65வது படத்தில் இணைந்த நயன் காதலர்... யார் தெரியுமா?
விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
Mon, 1 Feb 2021

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இப்படம் செம ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தளபதி65. இப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இக்கூட்டணியில் இது 4வது படம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.