×

இன்னும் கொரோனாவே முடியல… அதுக்குள்ள இன்னொரு நோயா? நொந்து போகும் சீன மக்கள் !

சீனாவில் கோழிகளின் மூலம் பறவைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சீனாவில் கோழிகளின் மூலம் பறவைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் உருவாகி உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இதுவரை 300க்கும் மேற்பட்டோரின் உயிரைக் குடித்துள்ளது. மருந்தே இதுவரைக் கண்டுபிடிக்கப் படாத நோய் என்பதால் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பி வருகின்றனர். இதனால் நோய் தொற்றை தடுக்க உலக நாடுகள் சீனாவுடனானப் போக்குவரத்துத் தொடர்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

இதனால் அவதிப்பட்டு வரும் சீன மக்களுக்கு இப்போது புதிதாக வைரஸ் நோய் உருவாகி இன்னும் பீதியைக் கிளப்பியுள்ளது. கோழிகளின் மூலம் பறவைக் காய்ச்சல் நோய் பரவிவருவதாக வெளியான செய்தியினை சீனாவின் வேளாண் அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பண்ணை ஒன்றில் மொத்தமுள்ள 6000க்கும் மேற்பட்ட கோழிகளில் 4,500 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருந்ததால் அவற்றைக் கொன்றுள்ளனர். H5N1 என்ற இந்த வைரஸ் நோய்  பறவைகளுக்கு சுவாச நோயை ஏற்படுத்தும் தன்மை உடையது எனவும் அது மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News