×

4 பேருக்கு மேல் கூடக்கூடாது… தூத்துக்குடியில் திடீர் உத்தரவு! ஏன் தெரியுமா?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் முடியும் நிலையில் அங்கு 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் முடியும் நிலையில் அங்கு 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகினர். ஆனால் அரசு தரப்பிலோ பொதுமக்கள் போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து விட்டதாக சொல்லப்பட்டது. தமிழகமெங்கும் பரவலால அதிர்வுகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் அந்த ஆலையை தமிழக அரசு சிறப்பு சட்டத்தின் மூலம் மூடியது.

இந்நிலையில் நாளை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமல் இருக்க, 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என பொதுமக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News