×

"மறையாத கண்ணீர் இல்லை" டீசர் ரிலீஸ் தேதி இதோ !

96 படத்தில் திரிஷாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி ஜி கிஷன். இந்த படத்திற்கு பிறகு குட்டி ஜானு என்ற பெயர் எடுத்து பெரும் பேமஸ் ஆகிவிட்டார். தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

 

கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்ப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த "மறையாத கண்ணீர் இல்லை" என்ற பாடல் ஆல்பம் ஒன்றில் நடிக்கிறார்.

தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் SV இயக்கத்தில் உருவாகும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்பாடலின் டீசர் ரிலீஸ் தேதியுடன் கூடிய செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. "  வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை 6 மணிக்கு இதன் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்பாடலை சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News