Categories: Cinema News latest news Review

பழைய காலத்து கதை… லிங்குசாமி அவ்ளோதான்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்… அட்டர் பிளாப் வாரியர்.?!

தமிழில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி இயக்கத்தில் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் வாரியார். இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டது. தெலுங்கு நடிகர் ராம் போதினி இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

கீர்த்தி செட்டி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு பாடிய புல்லட் பாடல் ஏற்கனவே இணையத்தில் செம வைரல். படத்தின் டிரைலரும் ஓரளவு ரசிக்கும்படி இருந்தது. ஆதலால் படம் நன்றாக இருக்கும் எனவும், லிங்குசாமி கம்பேக் கொடுப்பார் என்றும் தமிழ் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்து படத்திற்கு சென்றனர்.

ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சு உள்ளதாக தெரிகிறது. அதனை படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

படம் பார்த்து ரசிகர்கள், இது பழைய காலத்து கதை. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பார்வையாளர்களுக்கு நன்றாக தெரிந்து விடும். அந்த அளவுக்கு திரைக்கதை மோசமாக இருக்கிறது. லிங்குசாமி கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்து  தான் படத்திற்கு வந்தோம். ஆனால், இந்த படத்தை பார்த்த பிறகு இனி தமிழில் அவருக்கு வாய்ப்பு சுத்தமாக இல்லை. அவர் அவ்வளவுதான் என்ற நிலைமை வந்துவிட்டது என்று வருத்தத்துடன் பதிவிட்டு சொல்கிறார் ஒரு ரசிகர்.

இன்னொரு ரசிகர் நான் படம் பார்க்க வந்ததே கீர்த்தி செட்டிக்காக தான் அவர் நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் புல்லட் சாங் நன்றாக இருக்கிறது. மற்றபடி படத்தில் ஒன்றுமே இல்லை. ரொம்ப சுமாராக இருக்கிறது என்று வருத்தத்துடன் கூறிவிட்டு செல்கிறார் இன்னோர் ரசிகர்.

இதையும் படியுங்களேன் – நீங்களே இப்படி வச்சி செய்றீங்களே.?! முதலில் விஜய்.. இப்போ தனுஷ் சிக்கிட்டார்…

சினிமாவாசிகள் வாரியார் படம் மிகப்பெரிய வெற்றியடையும் லிங்குசாமி மீண்டும் தமிழில் பெரிய நடிகர்களோடு படத்தை இயக்குவார். என்று எதிர்பார்த்து இருந்தால் இப்படி ஆகிவிட்டது, இந்த திரைப்படம் போகிற போக்கை பார்த்தால் தமிழில் ஒரு பிளாப் படமாக மாறிவிடும் என்று வருத்தத்தில் கூறி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan