×

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..... 53 வயதில் தேர்வு எழுதிய நடிகை..

 

தமிழ் சினிமாவில் சத்யம், சாகசம், தேவி ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஹேமா. தெலுங்கில் 250 மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு நடிகர் சங்க துணைத்தலைவராகவும் இருந்து வருகிறார்.

2014ம் ஆண்டு ஆந்திராவில் ஜனசேனா கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். குழந்தை நட்சத்திரம் முதலே நடிக்க துவங்கி விட்டதால் அவரால் படிக்க நேரமே கிடைக்கவில்லை. 

hema

தற்போது அவருக்கு 53 வயது ஆகிவிட்டது. எனவே, இப்போதாவது படிக்க வேண்டும் என விரும்பிய அவர் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் எம்.ஏ படிக்க ஐதராபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார். 

இதற்கான நுழைவுத்தேர்வில் கலந்து கொண்டு அவர் தேர்வும் எழுதினார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News