Categories: Bigg Boss latest news television

அடடா! இப்படி ஓபனா கேட்டா நான் எப்படி பதில் சொல்லுவேன்? பிரதீப் கேள்வியால் திணறிய பூர்ணிமா!..

Poornima Ravi: பிக்பாஸ் சீசன் 7ல் பணப்பெட்டியுடன் வெளியேறி இருக்கும் பூர்ணிமா சமீபமாக நிறைய வெளிநிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி தான் தற்போதைய சமூக வலைத்தளத்தில் மீண்டும் வைரலாக பரவி வருகிறது. 

தமிழ் பிக்பாஸின் ஏழாவது சீசன் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டது. இதில் நிறைய புதுமுகங்களே இருந்ததால் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு முந்தைய சீசன்களில் வெற்றியாளர்கள் ஓரிரு வாரங்களிலேயே ரசிகர்களால் முடிவு செய்யப்பட்டு இருந்தனர். இந்த சீசனிலும் பிரதீப்புக்கு பெருவாரியான வோட்டுகள் வந்து கொண்டு தான் இருந்தது.

இதையும் படிங்க: மாட்டிக்கிட்ட பங்கு!… மனோஜை வசமாக சிக்க வைத்த முத்து.. கண்ணீருடன் நிற்கும் ரோகினி..

அவரின் ஓபனான பேச்சுகளும், கரடுமுரடான அணுகுமுறையை சக போட்டியாளர்கள் குற்றச்சாட்டுகளாக முன் வைத்தனர். இதை வைத்து அவருக்கு கமல்ஹாசன் ரெட் கார்டை கொடுத்தார். இது தவறான முன் உதாரணமாகவே பார்க்கப்பட்டது. பலரும் இந்த ரெட் கார்டுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து 35 நாட்களில் உள்ளே வந்த அர்ச்சனாவின் வோட்டு வங்கி எகிறியது. இதில் மக்கள் மனதில் பிரதீப்புக்காக நினைத்ததை அவர் சண்டையில் முன் வைக்க தொடர்ந்து அவருக்கே அதிக வோட்டுகள் விழுந்தது. இப்போது அவர் அவரே வெல்லுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆமா அவன்லா ஒரு ஆளு! கலைஞர் 100 விழாவில் பரிதாபத்துக்குள்ளான வடிவேலு – என்ன மேட்டர் தெரியுமா?

இதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பூர்ணிமாவிடம் பிரதீப் பற்றி என்ன சொல்ல போறீங்க என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையே இல்லை. காலம் பதில் சொல்லும். அப்போ என் நிலை புரிஞ்சிடும் என கொஞ்சம் உதறலுடனே பதில் அளித்தார். திருந்துற ஐடியாவே இல்லல என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Published by
Shamily