Categories: Bigg Boss latest news television

பிரதீப் தப்பா பேசுனா மத்தவங்க மட்டும் என்ன ஒழுங்காவா பேசுனாங்க!… ரகசியத்தை உடைத்த தினேஷ்…

Biggbosstamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 7 கிட்டத்தட்ட எல்லா பிரச்னையும் ஓய்ந்துவிட்டது. எல்லா பைனலிஸ்ட்டும் பேட்டி கொடுக்க துவங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தினேஷ் கொடுத்து இருக்கும் சமீபத்திய பேட்டியால் தற்போது ரசிகர்கள் செம குஷியாகி இருக்கின்றனர்.

கடந்த சீசன் ரச்சிதாவின் கணவர் தான் நடிகர் தினேஷ். தன் மனைவிக்காக கப்பை அடிக்க உள்ளே வந்தார். முதல் சில வாரம் அவருக்கு சரியாகவே அமைந்தது. ஆனால் தொடர்ந்து விசித்ராவுடன் ஏற்பட்ட மோதலால் அவரால் நான்காம் இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது. வெளியில் வந்தவர் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்துவருகிறார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் வச்ச கெடு! சொன்ன மாதிரியே செய்து காட்டிய நம்ம வீட்டுப் பிள்ளை

அதில் பிரதீப் ஆண்டனி குறித்து அவர் பேசும் போது, இந்த சீசன் ரொம்பவே திறமையான போட்டியாளர் பிரதீப் ஆண்டனி. அவரை எனக்கு பிடிக்கும். நாங்க ஐவரும் உள்ளே சென்ற போது எல்லார் ஆட்டத்திலுமே மாற்றம் வந்தது. சண்டை போட்டவர்கள் எல்லாம் சேர்ந்தனர்.

அதில் பிரதீப் சிலதை மாற்றினார். அப்போ அவர் மிஸ் செய்த விஷயங்கள் அவருக்கு எமனாக மாறியது. அதை மாயாவும், பூர்ணிமாவும் சரியாக பிடித்துகொண்டனர். திட்டமிட்டு காய் நகர்த்தி அவர் வெளியேற்றப்பட்டார். அதுவும் இல்லாமல் அவரை கெட்ட வார்த்தை பேசுகிறார் என்றனர்.

இதையும் படிங்க: இப்படியெல்லாமா சீன் வைப்பாங்க! படம் பாக்கவே தோணல.. வெளிப்படையாக விமர்சித்த ஆர்ஜே பாலாஜி

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily