Categories: Bigg Boss latest news television

பிரதீப் லைப்பை மாயாவும், பூர்ணிமாவும் காலி செய்து விட்டனர்… பொளந்துவிட்ட விஷ்ணு!…

Vishnu: பிக்பாஸ் சீசன் தமிழ் 7 முடிந்து பைனலிஸ்ட்கள் அனைவரும் வரிசையாக பேட்டி கொடுத்து வரும் நிலையில் இந்த முறை விஷ்ணுவின் பங்காகி இருக்கிறது. வரிசையாக பேட்டி கொடுத்துஇருக்கும் அவர் பிரதீப் குறித்து நிறைய பாசிட்டிவ் தகவல்களையே சொல்லி இருக்கிறார்.

அந்த பேட்டியில் இருந்து, பெண்கள் பாதுகாப்பு என்பதை பிரதீப் விஷயத்தில் நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். எதுவும் சண்டை நடப்பதாக அவர்கள் நினைத்தால் கூட உடனே உள்ளே வந்துவிடுவார்கள். அத்தனை கதவு அங்கு இருந்தது. பாதுகாப்பு குறைவாக எதுவும் நடக்கவில்லை.

இதையும் படிங்க: என் ராசா.. நீதான் என் புருஷன்!.. திடீரென எம்.ஜி.ஆரை கட்டிப்பிடித்த பெண்.. எப்போது நடந்தது தெரியுமா?..

எனக்கும் பெண்கள் சொன்னது அந்த இடத்தில் தான் எனக்கும் தெரிந்தது. நான் கூல் சுரேஷ் பிரச்னைக்கு மட்டுமே உரிமைக்குரல் தூக்கினேன். மற்றவர்கள் சொன்னதும் விஷயம் வேறு மாதிரி மாறியது. கூல் சுரேஷ் விஷயமே மட்டுப்பட்டு விட்டது. அந்த வீட்டில் எல்லாமே நமக்கு தெரியாது.

நாம் பார்க்குறதும், பேசுவது மட்டுமே தெரியும். நான் அப்போது நமக்கு தெரியாம எதுவும் நடந்து இருக்குமோ என நினைத்து தான் ரெட் கார்ட் கொடுத்தேன். வெளியில் வந்த பின்னரே நிறைய விஷயங்களை யூஸ் செய்தனர் என்பதை தெரிந்து கொண்டேன். பிரதீப் நல்ல போட்டியாளர் தான்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 25வது படம் இந்த படத்தின் இரண்டாம் பாகம்!.. செமயா ஸ்கெட்ச் போட்ட எஸ்.கே..

Published by
Shamily