×

ஆமாங்க ஐயா... வாய்ப்புக்காக தான் அத செஞ்சேன்.. ஓபனாக சொல்லிய பிரியா பவானி சங்கர்

தமிழக அரசியல் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை பிரியா பவானி சங்கரை ரசிகர்கள் வறுத்தெடுக்க துவங்கி இருக்கிறார்கள்.
 
Priya Bhavani Shankar

பெரும்பாலும் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்து சில நடிகர்கள் தான் வெற்றி கொடி நாட்டி இருக்கிறார்கள். இதில் முதல் நடிகையாக வெற்றி கண்டவர் நடிகை பிரியா பவானி சங்கர் தான். 

செய்தி தொலைக்காட்சியில் இருந்து சீரியல் அதை தொடர்ந்து சினிமா. பெரிய அளவிலான வெற்றி வாய்ப்பை பெறவில்லை என்றாலும் அம்மணிக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் இருக்கிறது. மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானார். 

தொடர்ந்து, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், அருள்நிதியின் களத்தில் சந்திப்போம் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தார். தற்போது, விக்ரமுடன் கோப்ரா, ஹரிஷ் கல்யாணுடன் ஓ மணப்பெண்ணே படத்தில் நடித்து வருகிறார். 

தனது சமூக வலைத்தள கணக்குகளில் செம ஆக்டிவாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசியலில் வெற்றிக்கண்ட திமுகவிற்கு வாழ்த்தி ட்வீட் தட்டி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பிரியா வாய்ப்புக்காக தான் ட்வீட் போட்டு இருக்கிறார் என அவரை சரமாரியாக ட்ரோல் செய்தனர். 


இதில் கடுப்பானவர், ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன் எனத் தடாலடியாக ட்வீட் தட்டி ஆஃப் செய்திருக்கிறார். 

இந்த ட்வீட்டிற்கு பலரும் பிரியா பவானி சங்கருக்கே ஆதரவாக ட்வீட் தட்டி வருகின்றனர். நீங்க விளையாடுங்க தலைவி நாங்க பாத்துக்குறோம் என கமெண்டுகள் பறந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News