Categories: Bigg Boss latest news television

ரச்சிதா என்னை மாமியாராவே பார்க்கலை… இப்பக்கூட இது நடந்துச்சு… தினேஷின் பெற்றோர் சொன்ன சம்பவம்!

Rachitha Mahalakshmi: தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் மிக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி கொண்டு இருக்கும் நிலையில் அவரின் மனைவி ரச்சிதா குறித்து அவர் பெற்றோர்கள் பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் தான் ரச்சிதா. அவர் அதே சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் கோபாலசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து ரச்சிதா சரவணன் மீனாட்சி தொடரில் பிசியான நடிகையானார்.

இதையும் படிங்க: தன்னை எதிர்க்கிறவர்களை இப்படித்தான் க்ளீன்போல்ட் ஆக்குவாரா அஜித்? கலைப்புலி தாணுவுக்கு ஏற்பட்ட நிலைமை?

தொடர்ந்து இருவரும் 10 வருடமாக வாழ்ந்து வந்த நிலையில் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குழந்தை இல்லாத காரணத்தால் நடந்த பிரச்னையா? இல்லை வேறு எதாவதா என இரு தரப்புமே இதுவரை வாய் திறக்கவே இல்லை.

மேலும் கடந்த சீசன் பிக்பாஸில் ரச்சிதா கலந்து கொண்டார். ஆனால் ஒரு இடத்தில் கூட கணவர் குறித்து பேசவே இல்லை. கடைசி கட்டத்தில் தான் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து அவர் கணவர் தினேஷ் இந்த சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்து இருக்கிறார்.

முதல் நாளில் இருந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு இருக்கும் தினேஷ் என் மனைவியுடன் சின்ன சண்டை பிரிந்து இருக்கோம். அவங்களுக்காக கடந்த சீசன் பார்த்தேன் எனக் கூறி வந்தார். இந்நிலையில் அவரின் பெற்றோர்கள் பேட்டியில் ரச்சிதா குறித்து பேசி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: என்னை அசிங்கப்படுத்துனாங்க!.. அத படமா எடுப்பேன்!.. வெங்கட்பிரபு ஆசை நிறைவேறுமா?!..

Published by
Shamily