என்னை அசிங்கப்படுத்துனாங்க!.. அத படமா எடுப்பேன்!.. வெங்கட்பிரபு ஆசை நிறைவேறுமா?!..

by சிவா |
venkat
X

Venkat prabu: இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல முகங்களை கொண்ட கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. அப்பா, பெரியப்பா ஆகியோர் சினிமாவில் இருந்ததால் இயல்பாகவே இவருக்கும் அதில் நுழைய விருப்பம் ஏற்பட்டது. துவக்கத்தில பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

இரண்டு படங்களில் ஹீரோவாக கூட நடித்திருக்கிறார். அதன்பின், இயக்குனராக மாறினார். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் சென்னை 28. சென்னையில் வசிக்கும் வாலிபர்களின் ஜாலியான கிரிக்கெட் வாழ்க்கையை சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. வழக்கமான தமிழ் சினிமாவின் ஃபார்முலாக்களையும் அப்படம் உடைத்திருந்தது.

இதையும் படிங்க: திரிஷாவை மட்டுமில்லை விஜய் முன்னாடியே அந்த நடிகையையும் மன்சூர் அலி கான் தப்பா தான் பேசினாரு!..

சினிமா இயக்குனர் என்றால் படப்பி்டிப்பில் மிகவும் சீரியஸாக இருப்பார்கள். கோபம் வந்தால் எல்லோரையும் திட்டுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வெங்கட்பிரபுவு அதற்கு நேர் எதிர். ஜாலியாக படம் எடுப்பார். பெரும்பாலும், தன்னுடைய நட்பு வட்டாரங்களில் இருப்பவர்களையே நடிக்க வைப்பார்.

சென்னை 28க்கு பின் சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அஜித்தை வைத்து மங்காத்தா எடுத்த பின் பெரிய இயக்குனர்களில் ஒருவராகவும் மாறினார். அதன்பின் சில படங்கள் சரியாக போகவில்லை. அப்போதுதான் சிம்புவை வைத்து மாநாடு எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இதையும் படிங்க: திரிஷா விவகாரம்.. விஜய், அஜித் அமைதி காப்பது சரியா?.. மீசையே இல்லையா என புளூ சட்டை அசிங்கப்படுத்துறாரே!..

வெங்கட்பிரபு இவ்வளவு திறமையாக திரைக்கதை அமைப்பாரா என பல இயக்குனர்களே அசந்து போனார்கள். இப்போது விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இது அப்பா - மகன் தொடர்பான கதை என சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தாய் லாந்து, தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் நடந்து வருகிறது.

வெங்கட்பிரபு லண்டனில் படித்தவர். இந்தியர்கள் என்றால் மரியாதை கொடுப்பார்கள் என்று நம்பித்தான் அங்கே போனாராம். ஆனால், இந்தியர்கள் மீது இன மற்றும் நிறவெறி நிகழ்த்தப்படுவதை அங்கே பார்த்துள்ளார். வெங்கட்பிரபுவே அதை நேரிடையாக சந்தித்திருக்கிறாராம். எனவே, அதை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் பல வருட கனவாக இருக்கிறது.

இது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: தன்னை எதிர்க்கிறவர்களை இப்படித்தான் க்ளீன்போல்ட் ஆக்குவாரா அஜித்? கலைப்புலி தாணுவுக்கு ஏற்பட்ட நிலைமை?

Next Story