Categories: Bigg Boss latest news television

புருஷன் பிக்பாஸ் வீட்டில் கண்ணீரில் ரச்சிதா… வைரலாகும் இன்ஸ்டா பதிவு..! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!

Rachitha Mahalakshmi: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பொண்டாட்டி கலந்துக் கொள்ள இந்த சீசனில் புருஷன் எண்ட்ரி கொடுத்து இருக்கும் சேதியே தற்போது வைரலாக பரவி வருகிறது. இதில் ரச்சிதாவின் இன்ஸ்டா பதிவு தான் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் புகழ்பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் பல வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாததால் மனஸ்தாபம் ஏற்பட்டதால் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிங்க:இசைஞானி கூட அத செய்யலையே!.. முதல் படத்திலேயே தரமான சம்பவம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கலந்துக் கொண்டார். அவருக்கு ஷிவினுக்கும் நல்ல பாண்டிங் இருந்தது. குடும்ப நண்பர்கள் டாஸ்கில் ரச்சிதாவின் அம்மாவும், அண்ணனுமே வந்தனர். ஆனால் கணவர் தினேஷ் வரவே இல்லை. அவரை பற்றி நிகழ்ச்சியில் எதுவுமே பேசவில்லை.

மறைமுகமாக குழந்தையில்லாமல் பட்ட கஷ்டத்தினை சொல்லி அழுது இருப்பார். இதனையடுத்து வெளியில் இருந்த தினேஷ் அவருக்கு ஓபனாகவே ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் தினேஷ் இந்த சீசன் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நேற்று உள்ளே வந்தார்.

இதையும் வாசிங்க: ரஜினி முதன்முதலாக அதிக சம்பளம் வாங்கிய திரைப்படம் எது தெரியுமா?… இத வாங்குறதுக்கு மனுஷன் பட்ட பாடு இருக்கே….

அதில் அம்மா கையை பிடித்தப்படி எனக்கு நீ.. உனக்கு நான் என கேப்ஷன் போட்டு இருந்தார். சமீபத்தில் தான் ரச்சிதாவின் தந்தை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் தனது முதல் நாளை செமையாக தொடங்கி இருக்கும் நிலையில் ரச்சிதா ஆதரவு தருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ரச்சிதாவின் போஸ்ட்டைக் காண: https://www.instagram.com/p/CzAclKxvbUk/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Published by
Shamily