×

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் இணைந்த புதிய
நட்சத்திரம்... அட இவரா?

இயக்குநர் மணிரத்னம் கல்கியின் `பொன்னியின் செல்வன்’
நாவலை மிகப்பிரமாண்டமாகப் படமாக்கி வருகிறார்.
 

சோழர்
வம்சத்தின் புகழ்பெற்ற பேரரசரான ராஜராஜ சோழனின்
கதையைத் திரைப்படமாக மணிரத்னம் எடுத்து வருகிறார். 

கொரோனா லாக்டவுன் தளர்வுக்குப் பின்னர்
ஹைதராபாத்தில் ஜனவரி 6-ம் தேதி தொடங்கி ஷூட்டிங்
நடந்து வருகிறது. தோட்டா தரணியின் கைவண்ணத்தில்
மிகப்பெரிய அரண்மனைகள், வீதிகள், போர்க்களக் காட்சிகள்
என பிரமாண்ட செட்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 
 

ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி மற்றும் கார்த்தி
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பெரிய பழுவேட்டரையரின் மனைவி மற்றும் மந்தாகினி
தேவி ஆகிய இரு வேடங்களில் ஐஸ்வர்யா ராய்
நடிக்கிறார்.பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்
நடிப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் பிக்பாஸ் புகழ்
ஹாரத்தியும் முக்கியமான வேடத்தில் நடிப்பதகாத் தகவல்
வெளியாகியிருக்கிறது. 

இந்த ஸ்டார் கேஸ்டிங்கோடு மற்றொரு முக்கிய நடிகரும்
தற்போது இணைந்திருக்கிறார். 90களில் முன்னணி நடிகராக
இருந்த ரஹ்மான்தான் அந்தப் புதிய நட்சத்திரம். ஹீரோவாக
நடித்துவந்த ரஹ்மான், தமிழ், மலையாளத்தில் பல ஹிட்
படங்கள் கொடுத்தவர். தற்போது இவரும் பொன்னியின்
செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
இருக்கிறார். தொடர்ந்து இரண்டு மாதங்கள் படத்தின் முக்கிய
பகுதிகளின் ஷூட்டிங்கை முடிக்க இருக்கிறார்கள்
படக்குழுவினர். 

From around the web

Trending Videos

Tamilnadu News