Connect with us
vijay

Cinema News

மாப்பிள்ளை இவர்தான்! ஆனால்? ‘படையப்பா’ காமெடியில் தாண்டவமாடும் விஜய் – ரஜினி மோதல்

இன்று கோலிவுட்டில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி உள்ளது ரஜினிக்கும் விஜய்க்கும் இடையேயான அந்த மோதல். ஜெய்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா முடிந்து ஒரு வார காலமாகியும் இன்னும் அந்த தாக்கத்திலிருந்து ரசிகர்கள் வெளிவந்த பாடில்லை. அந்த விழாவில் ரஜினி பேசிய பேச்சு அவர் கூறிய அந்த குட்டிக்கதை இவைகளால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அதை வைத்து ட்விட்டரிலும் சமூக ஊடகங்களிலும் ரஜினி ரசிகர்கள் விஜயை தாக்கி பேசி வருகின்றனர். இன்னும் ஒரு படி மேலாக ரஜினி அந்த விழாவில் பருந்து காக்கா என கதைகளை கூறி விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதில் பேசி இருந்தது கோடம்பாக்கத்தில் உள்ளவர்களையே ஆட வைத்து விட்டது.

இதையும் படிங்க : அங்கதான் நீ லேடி சூப்பர் ஸ்டார்!.. நயனிடம் ஷாருக்கான் பார்த்த வேலை!.. அப்செட்டில் லேடி சூப்பர்ஸ்டார்…

இது உண்மையிலேயே விஜயை பற்றி தான் ரஜினி பேசி இருக்கிறார் என பிரபல பத்திரிக்கையாளரும் திரை விமர்சகருமான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார். ஆனால் இந்தப் போட்டி ஒரு வேலை அஜித் இதற்குள் விடா முயற்சி படத்தை ஆரம்பத்தில் இருந்தால் வந்திருக்காது. அவர் இந்த அளவு இடைவெளி விட்டதனால் தான் விஜய் – அஜித் என்ற போட்டி மறைந்து ரஜினி – விஜய் என மாறி உள்ளது என்றும் கூறினார்.

vijay1

vijay1

ஆனால் ரஜினியின் அண்ணாத்த, தர்பார் போன்ற படங்கள் ரிலீஸ் சமயத்தில் கூட ரசிகர்கள் இந்த அளவு வெறித்தனமாக இல்லையே? இப்போது இருப்பதற்கு என்ன காரணம் என நிருபர் ஒருவர் செய்யாறு பாலுவிடம் கேட்டார். அதற்கு செய்யார் பாலு “ரசிகர்கள் அந்த சமயம் சும்மா இருந்தது சரிதான். ஆனால் இந்த ஜெயிலர் ஆடியோ வெளியீட்டுக்கு முன்பாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்தப் படத்தின் முதல் சிங்கிள் மூலமாக தக்க பதிலடி கொடுத்தார் ரஜினி. அதிலிருந்தே ரசிகர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டனர் “எனக் கூறினார்.

ரஜினியே பாடல் மூலம் பதிலடி கொடுக்கும் போது நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என நினைத்து ரசிகர்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டனர் என்றும் கூறினார். ஆனால் சூப்பர் ஸ்டார் என்னமோ ரஜினி தான் ஆனால் வியாபாரத்திலும் வசூலிலும் ரஜினியை விட விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார் என்றும் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : ஒரே ஒரு தப்பான முடிவு.. டோட்டல் சினிமா வாழ்க்கையும் குளோஸ்.. இருந்த இடம் தெரியாமல் போன தமிழ் ஹீரோயின்கள்!!

ஜெய்லர் மற்றும் லியோ இந்த திரைப்படங்களின் பிரீ ரிலீஸ் பிசினஸில் லியோ படம் தான் முதலில் இருக்கிறதாம். ஜெய்லர் படத்தில் கர்நாடகா சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் நடித்திருந்தாலும் கர்நாடகாவில் ஜெய்லர் படத்திற்கான பிசினஸ் வெறும் ஐந்து கோடி வரைக்கும் தான் விற்றிருக்கிறதாம். ஆனால் அதே கர்நாடகாவில் லியோ படத்தின் பிசினஸ் 18 கோடி வரைக்கும் போயிருக்கிறதாம்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top