Connect with us
jawan

Cinema News

அங்கதான் நீ லேடி சூப்பர் ஸ்டார்!.. நயனிடம் ஷாருக்கான் பார்த்த வேலை!.. அப்செட்டில் லேடி சூப்பர்ஸ்டார்…

தமிழில் விஜய்யை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களையே கொடுத்து வந்த இயக்குனர் அட்லி இப்போது முதன்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். முதல் அறிமுகத்திலேயே பாலிவுட் கிங் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் நடிகை நயன்தாரா விஜய் சேதுபதி மற்றும் தீபிகா படுகோனே பல முக்கிய நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

200 கோடி பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பதான். அந்த படம் 220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஆயிரம் கோடி வரை வசூல் பெற்றது.

இதையும் படிங்க : டேய் நான் சொன்னதே வேறடா!. போதும் நிறுத்துங்கடா!.. தலையில் அடித்து புலம்பும் மாரி செல்வராஜ்!…

பாதாளத்தில் கிடந்த ஹிந்தி சினிமாவை பதான் திரைப்படத்தின் மூலம் மீட்டெடுத்தார் ஷாருக்கான். இந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஜவான் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஜவான் திரைப்படத்தின் டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

jawan1

jawan1

மேலும் சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தின் முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி அதுவும் பல மில்லியன் வீயூவ்ஸ்களை தாண்டி போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் முதன்முதலாக ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா இந்த படத்திற்காக 11 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

அதேசமயம் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் வரும் தீபிகா படுகோனேவிற்கு சம்பளமாக 20 கோடி வரை கொடுக்கப்பட்டிருக்கிறதாம். படம் முழுக்க வரும் ஹீரோயினுக்கு 11 கோடி சம்பளம். கெஸ்ட் ரோலில் வரும் தீபிகாவிற்கு 20 கோடி சம்பளமா? என இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது .

இதையும் படிங்க : தலைவரே நீங்கள் செய்யாததையா செஞ்சிட்டாரு? முத்தக் காட்சியில் புகுந்து விளையாடிய கமலை பந்தாடிய எம்ஜிஆர்

google news
Continue Reading

More in Cinema News

To Top