
Cinema News
வீட்டில் பார்த்த பெண் முதல் பணத்தாசை பிடித்த நடிகை வரை.. காதலால் கூனிக்குறுகிய ரஜினிகாந்த்
Published on
By
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் உயர்ந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய இடர்களை சந்தித்து இருக்கிறார். அதிலும் காதல் என்ற பெயரில் அவர் பட்டது நிறைய அவமானங்களே என்பதும் ஒரு நடிகை கூட அவரை ஏமாற்றி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரஜினிக்கு பெண்கள் மீதான ஈடுபாடு அதிகம். ஆனால் அது அவர் குடும்பத்துக்கு ரொம்ப மனவருத்தத்தினை கொடுத்து விடுகிறது. இதனால் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவார் என நம்புகின்றனர். ஒரு பெண்ணை பார்க்க குடும்பத்தினர் அனைவரும் செல்கின்றனர். ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றாலும் குடும்பத்துக்காக செல்கிறார்.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து சண்டைக்கு இதுதான் காரணமா?.. வாலி போல இவர் வரவே மாட்டாரா?.
இருவீட்டாருக்குமே பெண்ணை பிடித்துவிடுகிறது. பெண் வீட்டார் கொஞ்சம் வசதிப் படைத்தவர்கள். உடனே ரஜினி குடும்பத்தினர் ஓகே சொல்லிவிட ரஜினியும் சரி என்கிறார். ஆனால் அந்த பெண்ணோ மாப்பிள்ளை கருப்பாக இருக்கார். பார்க்க ரவுடி மாதிரி இருப்பதாக கூறி நிராகரித்துவிடுகிறார். இதை கேட்ட ரஜினி கொதித்துப் போனார். பெரிய அவமானமாக நினைத்தாராம்.
அதை தொடர்ந்து, நடிகரான பின்பு ரஜினியை பல நடிகைகள் விரும்பினர். சிலர் மீது அவருக்கு விருப்பம் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தை வெளிப்படுத்த அவருக்குத் தைரியம் வந்ததில்லை. ஆனால் சிவந்த நிறமுள்ள ஒரு பிரபல நடிகை ரஜினியோடு இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் ஜோடியாகவும், இன்னொரு படத்தில் தங்கையாக நடித்தாராம்.
இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..
நிறைய பணத்தாசை கொண்ட அந்த நடிகை ரஜினியை காதலிப்பதாக சொல்கிறார். காசுக்காக ஒரு பெரிய மனிதரின் கட்டுப்பாட்டில் இருந்தார் அந்த நடிகை. ரஜினியை விடாமல் துரத்த அந்த மனிதரையும் விடாமல் இரு குதிரையில் சவாரி செய்ய நினைக்கிறார். அந்த பெரிய மனிதர் காதலை காலி செய்ய பிரச்னை செய்ததும் தான் விஷயம் பூதாகரமாகிறது.
வில்லங்கமான அந்த நடிகையை நம்பியது தப்பு என நினைத்து பின்னர் ரஜினியே விலகி இருக்கிறார். ஆனால் அந்த நடிகை யார் என்ற தகவல் கசியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...