Connect with us

Cinema News

பொண்ணு படம்னு ரஜினி நடிக்க மாட்டார்!.. அதுக்கு வேற காரணம் இருக்கு.. செந்தில் சொன்ன விஷயம்!..

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான செந்தில் படையப்பா படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிகாந்த் உடன் லால் சலாம் படத்தில் இணைந்து நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில் காம்பினேஷனை ரசிகர்கள் ஒரு காலத்திலும் மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு இருவரும் தமிழ் சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளன்ர்.

லால் சலாம் படத்தில் பூசாரி கதாபாத்திரத்தில் செந்தில் நடித்திருக்கிறார். செந்தில் மற்றும் தம்பி ராமைய்யா காம்பினேஷன் லால் சலாம் படத்தில் ரொம்பவே சிறப்பாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: விஜயகாந்த் செய்ததை விட பெருசு இல்லயே! இளையராஜாவுக்காக இறங்கி வந்த வடிவேலு.. இதுதான் காரணமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், பொண்ணு இயக்குற படம் என்பதால் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்றும் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தின் கதை ரஜினி சாருக்கு பிடித்தால் மட்டுமே நடிப்பார். அந்த கதை நல்லா இருக்கணும், நிறைய பேருக்கு புடிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே நடிப்பார். லால் சலாம் படத்திலேயே கேமியோவாக தான் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அப்படி நடிக்க வேண்டும் என்றாலும் அவரது கதாபாத்திரம் மற்றும் கதை சிறப்பாக அமைய வேண்டும் எனக் கூறியுள்ளார் செந்தில்.

ஒரு முறை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி சாரை சந்திக்கும் போது தன்னை வைத்து ஒரு படத்தை தயாரிக்க கால்ஷீட் கொடுக்கிறேன் என்றார் ரஜினிகாந்த். அந்த படத்தை நான் தயாரிக்கவில்லை. தயாரித்து இருந்தால் பல கோடி சம்பாதித்து இருக்கலாம். காசுக்கு எல்லாம் நான் அப்போ ஆசைப்படல, ஆனால், ரஜினி சொல்லி அதை மிஸ் செய்து விட்டோமே என்கிற வருத்தம் உள்ளது என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஹீரோயினை விட இவங்க செம ஹாட்டு!.. ஒரே பாடலில் பேமஸ் ஆன க்யூட் கேள் இவங்கதான்…

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top