Connect with us

Cinema News

இன்னும் 10 நாட்கள் விட்டிருந்தால் உயிரே போயிருக்கும்!.. ரஜினிக்கு கெடு விதித்த டாக்டர்கள்!…

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே பரபரப்பாக ஓடிக்கொண்டு இருப்பவர். ஓயாத உழைப்பால் அவர்  உயிரே போகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார். அதுவும் ஒருமுறை அவர் உயிருக்கே டாக்டர்கள் கெடுவிதித்த சம்பவமெல்லாம் நடந்ததாம்.

1979ம் ஆண்டு ரஜினிகாந்த் திடீரென நரம்பு மண்டல பாதிப்பால் விஜயா நர்சிங் ஹோமிங்கில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோத்த டாக்டர்கள் இன்னும் ஒரு 10 நாட்கள் கழித்து இவரை அழைத்து வந்து இருந்தால் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். காப்பாத்துவதே கஷ்டமாகி இருக்கும் என்றனர்.

இதையும் படிங்க: இப்பதான் உனக்கு அது தோனுச்சா?!.. படப்பிடிப்பில் விசித்ராவை பாடாய் படுத்திய கவுண்டமணி!..

இந்த விஷயமும் தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பான செய்தியாகி விட்டது. பலர் ரஜினிகாந்த் உயிர் பிழைத்து வருவார் என நம்பினர். ஒருசிலரோ அவ்வளவு தான் பிழைக்க மாட்டார். இனி ரஜினியின் கதை முடிந்துவிட்டது எனவும் கிசுகிசுத்தனர். ரஜினி மேற்சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டார். ரஜினியின் நண்பருமான சுஜாதா ஒரு பேட்டியில் கூறும்போது, ப்ரியா படப்பிடிப்பில் எனக்கு ரஜினி அறிமுகமானார்.

கோலிவுட்டில் பெரிய நடிகராக வளர்ந்து வந்தார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார். அப்போதே ரஜினிக்கு நரம்பு மண்டல பிரச்னை இருப்பதை உணர்ந்தேன். ஏனெனில்,  பெங்களூரில் நைட் எட்டரை மணிக்குப் தப்புத்தாளங்கள் படப்பிடிப்பில் சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டு இருப்பார். அடுத்த அரை மணி நேரத்தில் பெங்களூரில் சென்னை விமானம் ஏறிவிடுவார்.

இதையும் படிங்க: பாடாய்படுத்தும் நெப்போட்டிசம்!.. தமிழ்த்திரை உலகில் அல்லோகலப்பட்ட நடிகர் நடிகைகள்…

அங்கே ஷூட்டிங் முடிப்பார். நைட்  பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய் விடுவார். அதிகாலையில் ப்ரியா ஷுட்டிங்கில் கலந்துக்கொள்வார். திரும்பிப் பெங்களூர் வந்து அதே சைக்கிளின் செயினை சுழற்றி விட்டு மீண்டும் சிங்கப்பூர். இந்த மாதிரி அலைந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படாதா எனவும் கூறி இருப்பார். பலகட்ட சிகிச்சைக்கு பின்னர் ரஜினி மீண்டும் நடிப்புக்கிள் இறங்கி வெற்றி கண்டார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top