×

சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக அந்த  இசை இயக்குனர்...ரஞ்சித் முடிவு சரியா?....
 

 
ranjith

அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித்.  அப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த கானா பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தது. அதன்பின் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் வரை சந்தோஷ் நாராயணின் இசை அப்படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

santosh

சந்தோஷ் நாராயணைன் மகள் தீ இசையமைத்து வெளியாகிய ‘எஞ்சாமி’ பாடல் யுடியூப்பில் செம ஹிட் அடித்தது. இப்பாடலை அறிவு என்பவருடன் இணைந்து தீ எழுதியிருந்தார். அறிவு இப்பாடலை தீயுடன் இணைந்து பாடியதோடு அந்த பாடல் வீடியோவிலும் நடித்திருந்தார். ஆனால், இப்படல் தொடர்பான விளம்பரங்களில் அறிவின் பெயர் புறக்கணிக்கப்படுவதாக ரஞ்சித் பகீரங்கமாக புகார் கூறினார். மேலும், சார்பட்டா பரம்பரை படத்தில் இடம் பெற்ற சில பாடல் வரிகளை சந்தோஷ் நாராயணன் நீக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது ரஞ்சித் - சந்தோஷ் நாராயாணன் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

Ranjith

எனவே, இனிமேல் ரஞ்சித் படங்களில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வாய்ப்பில்லை எனத்தெரிகிறது. மேலும், தனது படங்களுக்கு இசையமைக்க ரஞ்சித் இளையராஜாவை அணுக திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News