×

தடைகளை தகர்த்து வெளியான நாடோடிகள் 2 - ரசிகர்கள் உற்சாகம்

நீதிமன்றத்தால் தடையால் இன்று காலை வெளியாகாமல் இருந்த நாடோடிகள் 2 திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
 

சசிக்குமார், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்து சமுத்திரக்கனி இயக்கியுள்ள ’நாடோடிகள் 2’என்ற திரைப்படம் இன்று காலை வெளியாக விருந்த நிலையில், திடீரென நேற்று மாலை சென்னை ஐகோர்ட் இந்த படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்த படத்தின் தமிழகம் மற்றும் புதுவை ரிலீஸ் உரிமையை பெற தன்னிடமிருந்து ரூபாய் 3.5 கோடி ரூபாய் தயாரிப்பாளர் பெற்றதாகவும்  ஆனால் வேறு ஒருவருக்கு இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை கொடுத்துவிட்டதால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் எப்எம் பைனான்ஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதன் விளைவாகவே நீதிமன்றம் தடை விதித்தது. எனவே நாடோடிகள் 2 இன்று காலை வெளியாகவில்லை. 

இந்நிலையில், சம்பந்த பட்டவர்களிடம் தயாரிப்பு நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சமரசம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று மாலை 7 மணிக்கு நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. இது சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News