Categories: Cinema News latest news

நானும் என் கணவரும் பிரிகிறோம்!…..நடிகை சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் ‘மாசுகோவின் காவிரி’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து பானா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

இதையும் படிங்க: நீயெல்லாம் ஏன்டா நடிக்க வந்த!…கெட் அவுட்…. விஜய்சேதுபதியை விரட்டிய இயக்குனர்….

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் சித்தார்த்தை காதலித்தார். இவர்கள் காதல் திருமணத்தில் சென்று முடியும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.

பின்னர் படங்களில் கவனம் செலுத்திவந்த இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்தார். இந்த காதல் திருமணத்தில் சென்று முடிந்தது. திருமணத்திற்குப் பின்னும் தொடர்நது படங்களில் நடித்துவந்தார் சமந்தா. சமீபகாலமாக சமந்தாவின் விவாகரத்து செய்தி அதிகமாக அடிபட்டு வந்தது. ஆனால், இதுபற்றி சமந்தா எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சமந்தா ‘நானும், சைத்தன்யாவும் கணவன் மனைவியாகவே பிரிய முடிவெடுத்துள்ளோம். அதிர்ஷ்டவசமாக எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அதுதான் எங்கள் உறவின் பலம். அந்த உறவு எப்போதும் எங்களை இணைத்திருக்கும்.

இதையும் படிங்க: இத பாத்தா புத்தருக்கும் மூடு வரும்!… எக்கு தப்பா போஸ் கொடுத்த நடிகை கிரண்….

இந்த கடினமான நேரத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் எங்களின் தனிப்பட்ட பிரச்சனையை புரிந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். உங்களின் ஆதரவுக்கு நன்றி’ என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதேபோல், சமந்தாவை பிரிவதாக நாக சைத்தன்யாவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, சமந்தா விவாகரத்து பற்றி வெளியான செய்திகள் முடிவுக்கு வந்துள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா